ETV Bharat / sports

ஷிகர் தவானின் எளிதில் முறியடிக்க முடியாத 5 சாதனைகள்! - Shikhar Dhawan Records - SHIKHAR DHAWAN RECORDS

Shikhar Dhawan Records: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவானின் எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

Etv Bharat
Shikar Dhawan (ANI Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 4:09 PM IST

ஐதராபாத்: இந்திய அணியில் 14 ஆண்டுகள் கோலோச்சிய வீரர் ஷிகர் தவான். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஷிகர் தவான் அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் புத்தகத்தில் தனக்கென தனி பக்கத்தை எழுதிய ஷிகர் தவான், எந்த வீரரும் எளிதில் முறியடிக்க முடியாத ஐந்து சாதனைகளை படைத்துள்ளார்.

100வது போட்டியில் சதம்: 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தவான் இந்த சாதனையை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ரன் குவித்தவர்: ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனையையும் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1000, 2000 மற்றும் 3000 ரன்கள் வேகமாக எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை தவான் வசம் உள்ளது.

முதல் டெஸ்டில் சதம்: 2013ஆம் ஆண்டு முதல் டெஸ்டில் விளையாடிய ஷிகர், தனது பேட்டிங் திறமையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தினார். மார்ச் மாதம் மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்டில், அவர் 85 பந்துகளில் சதம் அடித்தார். இதனுடன், அறிமுக போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது இந்த சாதனையை இதுவரை வேறு எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்: டி20 வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 689 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தான். இதுவரை எந்த இந்திய வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

முதல் டெஸ்டில் அதிக ரன்: முதல் டெஸ்ட் போட்டியில் 174 பந்துகளில் 187 ரன்கள் குவித்த முதல் பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் மட்டுமின்றி தொடக்க போட்டியில் அதிக ரன் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் ஷிகர் தவான் படைத்தார்.

அதேபோல், ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார். வெறும் 16 இன்னிங்சில் அவர் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

கோல்டன் பேட் விருது: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஷிகர் தவான் அதிக ரன் குவித்த வீரராக மட்டுமின்றி தொடர் நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் கோல்டன் பேட் விருது பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஷிகர் தவானின் சாதனை பட்டியல்:

அறிமுக டெஸ்டில் அதிவேக சதம் (174 பந்துகளில் 187 ரன்).

2015 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்.

2013ஆம் ஆண்டு அதிக ஒருநாள் சதங்கள்.

2014 ஆம் ஆண்டில் விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருது.

டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013 மற்றும் 2017ல் அதிக ரன்கள் எடுத்தவர்.

ஐசிசி போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய பேட்ஸ்மேன்.

ஆசிய கோப்பை 2018ல் அதிக ரன்கள் எடுத்தவர்.

ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இரண்டு முறை தங்க பேட் வென்ற வீரர்.

விருது: ஷிகர் தவானின் அசாதாரண சாதனைகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு 2021 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதையும் படிங்க: "என் கதையில் அவர் தான் ஹீரோ"- ஷிகர் தவான் பளீச் பதில்! - Shikhar Dhawan biopic

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.