ETV Bharat / sports

கிரிக்கெட்டின் டிஎல்எஸ் முறையை உருவாக்கிய டக்வொர்த் மறைவு! டிஎல்எஸ்-ல் மறைக்கப்பட்ட எஸ்? அது யார்? - DLS Method Frank Duckworth dies

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 1:03 PM IST

கிரிக்கெட்டில் பிரபல டிக்வொர்த் லீவிஸ் விதிமுறை உருவாக்கிய பிராங்க் டக்வொர்த் காலமானார்.

Etv Bharat
File Photo: Frank Duckworth (Getty Images)

செயின்ட் லூசியா: கிரிக்கெட்டில் புகழ்பெற்ற டிஎல்எஸ் எனப்படும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை உருவாக்கியவர்களில் ஒருவரான பிராங்க் டக்வொர்த் காலமானார். அவருக்கு வயதுஇ 84. வயது மூப்பின் காரணமாக அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட்டில் மழை உள்ளிட்ட பேரிடரால் ஆட்டம் பாதிக்கப்பட்ட போது, ரன் விகிதத்தை துல்லியமாக கணித்து எதிரணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயிக்க பயன்படுத்தப்படும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவராவார்.

லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டக்வொர்த் அணுஆயுத தயாரிப்பு துறையில் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து புள்ளியல் துறையில் பட்டம் பெற்ற அவர், புள்ளியல் நிபுணராகவும் அறியப்படுகிறார். கடந்த 1992 ஆம் ஆண்டு இவரும் லீவிஸ் மற்றூம் ஸ்டீவ் ஸ்ட்ரம் உள்ளிட்டோர் இணைந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை உருவாக்கி உள்ளனர்.

தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஒப்பந்த அடிப்படையிலான புள்ளியல் துறை நிபுணராக பணியாற்றிய இவர், டக்வொர்த் லீவிஸ் முறைய சர்வதேச கிரிக்கெட்டில் புகுத்தும் அளவுக்கு தேவையான மாற்றங்களை நெறிமுறைப்படுத்தி உள்ளனர். அதன் பின் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் டக்வொர்த் லீவிஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த 1992ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டட்த்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொண்டன. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு டிஎல் முறை கொண்டு ஆராயப்பட்டது. மழைக்கு முன்னதாக 13 பந்துகளில் 22 ரன்கள் தென் ஆப்பிரிக்கா எடுக்க வேண்டி இருந்த நிலையில், டிஎல் முறை கொண்டு கணித்த பின் 1 பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டியது போல் மாறியது.

இது அப்போது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து கைவிடப்பட்டது. அதன் பின் அந்த விதியில் பலவேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு கள நிலவரத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 1997ஆம் ஆணடு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் டக்வொர்த லீவிஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

பின்னர் 2014ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்ட்ரம் என்பவர் இந்த விதிமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அதன் பின் டிஎல் என்ற அழைக்கப்பட்டு வந்த விதி, டிஎல்எஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டக்வொர்த் மற்றும் லிவீஸ் சேவையை பாராட்டும் வகையில் பிரிட்டன் பேரரசில் அவர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2020ஆம் அண்டு ஏப்ரல் மாதம் தனது 78 வயது லீவிஸ் காலமானார். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட பல்வேறு ஆட்டங்களில் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்ட நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் பாதிக்கப்பட்ட போது கூட டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்கதேசம் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இவர் ஒருவர் மட்டும்தான் எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்தார்" - ரஷித் கான் கூறியது யாரை? - T20 World Cup 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.