சென்னை: கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குவாலிபையர் 1ல் கொல்கத்தா அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி எலிமினேட்டரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியுடன் மோதி, அதில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. அதற்கான பயிற்சியில் இரு அணிகளும் இன்று மேற்கொள்ள இருந்தன. ஆனால், மழையின் காரணமாக பயிற்சியை இரு அணிகளும் ஒத்திவைத்துள்ளது.
இந்தs சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேt கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியின் ப்ரோமோஷன் போட்டோஷூட்டில் கலந்து கொண்டனர்.
இருவரும் மெரினா கடற்கரை மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ஆட்டோவில் ஐபிஎல் கோப்பையை வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைthதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: Fact Check; ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் மேட்ச் ஃபிக்சிங்கா? பேனரை வைத்து பரவிய தவறான தகவல்! - Match Fixing Fact Check