பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமார், எஸ்டோனியா நாட்டை சேர்ந்த பர்னத் ரீனா என்பவரை எதிர்கொண்டார். 1/16 வெளியேற்றுதல் சுற்றில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.
🇮🇳 𝗔𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝘄𝗶𝗻 𝗳𝗼𝗿 𝗗𝗲𝗲𝗽𝗶𝗸𝗮! Deepika Kumari wins her second consecutive match in the women's individual event, defeating Quinty Roeffen 6-2 in the round of 32.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
⏰ She will next take on Michelle Kroppen in the round of 16 on the 3rd of August at 1:52 pm IST.… pic.twitter.com/fB62sgwRNj
நேர்த்தியாக அம்புகளை எய்த தீபிகா குமாரி, எஸ்டோனியா வீராங்கனைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இறுதியில் எஸ்டோனியா வீராங்கனை பர்னத் ரீனாவை 6-க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் தீபிகா குமாரி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து விளையாடிய தீபிகா குமாரி, நெதர்லாந்தை சேர்ந்த Quinty Roeffen என்பவரை 1/8 வெளியேற்றுதல் சுற்றில் 6-க்கு 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோல் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்ஹகைன், நார்வேயை சேர்ந்த சன்னிவா ஹாப்ஸ்டாட் என்பவரை எதிர்கொண்டார். முதல் படிகளில் இருவரும் சமநிலையில் இருந்த அடுத்தடுத்த சுற்றுகளில் லவ்லினா சரமாரி குத்துகளை விட்டு எதிரணி வீரங்கனை திணறடித்தார்.
அடுத்தடுத்து நாக் அவுட் குத்துகளை கொண்டு சன்னிவா ஹாப்ஸ்டாட்டை நிலைகுலையச் செய்தார் லவ்லினா. இறுதியில் 5-க்கு 0 என்ற புள்ளி கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் லவ்லினா, சீனாவை சேர்ந்த Li Qian என்பவரை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய சாம்பியனான சீனாவின் Li Qian-ஐ எதிர்கொள்வது லவ்லினாவுக்கு கடினமாக இருக்கலாம். அதேநேரம் அந்த சுற்றில் அவர் வெற்றி பெற்றல் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க உறுதியாகும். அசாமை சேர்ந்த லவ்லினா போர்ஹகைன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳 𝗙𝗮𝗻𝘁𝗮𝘀𝘁𝗶𝗰 𝘄𝗶𝗻 𝗳𝗼𝗿 𝗟𝗼𝘃𝗹𝗶𝗻𝗮! Olympic Bronze medallist, Lovlina Borgohain gets off to a fine start in her Olympic campaign as she wins her round of 16 bout against Sunniva Hofstad.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
🥊 A win in her next bout will assure a medal for India.
⏰ She will next… pic.twitter.com/6EGI5tIdmc
அதேநேரம் விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருக்கு பின் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்த மூன்றாவது குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹகைன் என்பது குறிபிடத்தக்கது. ஆடவர் 71 கிலோ பிரிவில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் ஈகுவடார் நாட்டை சேர்ந்த ஜோஸ் ரோட்ரிக் டெனரியோ என்பவரை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: கர்ப்பத்திலும் நாட்டுக்காக விளையாட்டு.. எகிப்து வாள்வீச்சு வீராங்கனையின் நெகிழ்ச்சி பதிவு! - Paris Olympics 2024