சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரின் நேற்றைய போட்டியில் அறிமுக அணியான ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியை 11-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணி.
Surgical precision 🤌
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 29, 2024
Lily Zhang's sensational winner is your @Dafanewsindia shot of the tie in tonight's clash between PBG Bengaluru Smashers & Jaipur Patriots 🌟💯
Catch the action live tomorrow at the Jawaharlal Nehru Indoor Stadium. Tickets available on… pic.twitter.com/PlYfuIo94A
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியும், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணியும் பலப்பரிட்சையில் ஈடுபட்டது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியின் சோ சியுங்மின்னும், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணியின் அல்வாரோ ரோபில்ஸ் மோதினர். இதில், முதல் இரு செட்களையும் அல்வாரோ ரோபில்ஸ் 11-6, 11-7 என புள்ளிகளில் கைப்பற்றினார். நெருக்கமாக அமைந்த கடைசி செட்டை சோ சியுங்கின் 11-10 எனக் கைப்பற்ற முடிந்தது. முடிவில் அல்வாரோ ரோபில்ஸ் 2-1 (11-6, 11-7, 10-11) என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் நித்யஸ்ரீ மணியும், பெங்களூரு அணியின் லில்லி ஜாங்குடனும் மோதினர். இதில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய லில்லி ஜாங் 3-0 (11-5, 11-10, 11-5) என கணக்கில் வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியின் சோ சியுங்மின் - நித்யஸ்ரீ மணியும் பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணியின் அமல்ராஜ் அந்தோனி - லில்லி ஜாங் ஜோடியும் மோதின. இதில், சோ சியுங்மின் - நித்யஸ்ரீ மணி ஜோடி 3-0 (11-7, 11-9, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆட்டத்தை மாற்ற முயற்சித்தனர்.
தொடர்ந்து, நான்காவதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் சினேஹித்தும், பெங்களூரு அணியின் ஜீத் சந்திராவும் நேருக்கு நேர் மோதினர். இதில், ஜீத் சந்திரா 3-0 (11-8, 11-9, 11-6) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
C̶h̶e̶c̶k̶m̶a̶t̶e̶ Cholemate from the Queen 👑🟡
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 29, 2024
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside India https://t.co/LqE4fqYpomhttps://t.co/kk8fLQAEWY
Tickets available on https://t.co/or5ruqsmLk… pic.twitter.com/e17lgKHi7l
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் சுதாசினி சவெட்டாபுட்டும் பெங்களூரு அணியின் மணிகா பத்ராவும் களத்தில் சந்தித்தனர். இதில் மணிகா பத்ரா 3-0 (11-10, 11-4, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆட்ட நேர முடிவில் பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணி 11-4 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. அதனால், ஜெய்ப்பூர் அணிக்கு இது 2வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிக்சருடன் கேரியரை தொடங்கிய வீரர்கள்! பட்டியலில் 2 இந்திய வீரர்கள்! யாரார் தெரியுமா?