ETV Bharat / sports

20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! - T20 World Cup India Squad - T20 WORLD CUP INDIA SQUAD

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 3:54 PM IST

Updated : Apr 30, 2024, 4:12 PM IST

மும்பை: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி. அறிவித்து இருந்தது.

நியூசிலாந்து மட்டுமே இதுவரை உலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறப் போகும் 15 வீரர்கள் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் டி20 உலக கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதேநேரம் இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் பெயர் இடம் பெறவில்லை.

டி20 தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்

மாற்று வீரர்கள் : சுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங்

இதையும் படிங்க: ஆர்வம் இருந்தும் வாய்ப்பு இல்லாமல் தவித்த ரோகித் சர்மா.. ஹிட் மேனின் சில சுவாரஸ்ய தகவல்கள்! - Rohit Sharma Cricket Journey

Last Updated : Apr 30, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.