ETV Bharat / sports

ஆப்கானுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு! சூர்யகுமார் - ஹர்திக் ஜோடி அசத்தல் ஆட்டம்! - Ind vs Afg T20 world Cup 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 10:05 PM IST

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

Etv Bharat
India vs Afghanistan T20 Super 8 (IANS Photo)

பார்படோஸ்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டம் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் குரூப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்று (ஜூன்.20) பார்படோஸ் தீவில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஷீத் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 20 ரன்கள் மட்டும் எடுத்து எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இதனிடையே விராட் கோலி தன் பங்குக்கு 24 ரன்கள் மட்டும் எடுத்துக் கொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். ஷிவம் துபே 10 ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, யாதவுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

இறுதியில் இந்த ஜோடியை பசல்ஹக் பரூக்கி பிரித்தார். அவரது பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 130 ரன்களில் தட்டுத்தடுமாறி கொண்டு இருந்த இந்திய அணியை யாதவும் - பாண்டியாவும் சேர்ந்து 170 ரன்களை கடக்க உதவினார். சூர்யகுமார் யாதவை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஹர்திக் பாண்டியாவும் 32 ரன்கள் குவித்த கையோடு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அர்ஷ்தீப் சிங் 2 ரன்களுடன் களத்தில் நின்றார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் பசல்ஹக் பரூக்கி, கேப்டன் ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: 20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 8: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு! தாக்கு பிடிக்குமா ஆப்கான்? - Ind vs Afg T20 world Cup 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.