கயானா: டி20 உலகக் கோப்பையில் 14வது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ், சத்ரான் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். ஹென்றி, சாண்ட்னர் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த நிலையில் சத்ரான், ஹென்றி பந்தில் 44 ரன்களுக்கு போல்டானார்.
மறுமுனையில் அபாரமாக விளையாடிய குர்பாஸ் அரைசதம் கடந்தார். மூன்றாவதாக களமிறங்கிய அஸ்மதுல்லா 22 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய நபி, ரஷித் கான் அனைவரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். மறுமுனையில் தூணாக நின்று விளையாடிய குர்பாஸ் 80 ரன்களுக்கு போல்ட் பந்தில் போல்டானார். ஆஃப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் பவுலர்கள் முதல் பந்திலேயே நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையும் படிங்க: T20 World Cup 2024: பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்க அணி கடந்து வந்த பாதை!
ஃபரூகி பந்தில் ஃபின் ஆலன் டக் அவுட்டானார். இதனைதொடர்ந்து கான்வே 8 ரன்களுக்கு நடையை கட்டினார். ஃபரூகி வேகத்தில் அனல் பறந்த நிலையில், நியூஸிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் வில்லியம்சன் (9), மிட்செல் (5) என அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைதொடர்ந்து பந்துவீச வந்த ரஷித் கான் சுழலில் சிக்கி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் மார்க் செப்மன் (4), பிரேஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் என அவுட்டாகினர். இதனையடுத்து நியூஸிலாந்து அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஃப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எளிதாக வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் டி20 போட்டிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணிக்கு உலகக் கோப்பை முதல் லீக் போட்டியிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: T20 World Cup 2024: பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்க அணி கடந்து வந்த பாதை! - T20 World Cup 2024