மேஷம்: மிகவும் கட்டுப்பாடுடன், எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறீர்களோ அதைப் பொறுத்து வெற்றி பெறுவீர்கள். அரசியலில் பணியாற்றினால், உயர்ந்த பதவி அல்லது பொறுப்பு வழங்கப்படலாம். வியாபாரம் செய்பவர் எனில் வாரத்தின் இரண்டாம் பகுதியில், எதிர்பார்க்கும் லாபத்தைப் பெறுவீர்கள். அது மட்டுமல்லாமல், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஒரு காதல் உறவு அமோகமாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். இல்வாழ்க்கையை அனுபவிக்க பல மகிழ்ச்சியான தருணங்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எப்போதும் போல் சாதாரணமாக இருக்கும்.
ரிஷபம்: பணியிடத்தில் உள்ள போட்டியாளர்கள் உங்களது கவனத்தை திசைத்திருப்ப முயற்சிக்கலாம். இந்த நேரத்தில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அது குறுகிய தூரமாகவோ அல்லது சற்று தொலைவாக இருந்தாலும் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில் வீட்டைப் பழுதுபார்ப்பது அல்லது பிற செலவுகளுக்காக கை மீறி செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால், பட்ஜெட் கொஞ்சம் ஆட்டம் காணக்கூடும்.
மிதுனம்: எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற வேண்டுமானால் கடுமையாக உழைத்து கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஏனென்றால், எந்தவொரு நாள்பட்ட நோயும், அது பருவகால அல்லது வேறுவிதமாக இருந்தாலும், உயிரைப் பறிக்கக்கூடும். ஏற்கனவே ஒரு காதல் உறவில் இருந்தால், குடும்பத்தினர் உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வாய்ப்புள்ளது.
கடகம்: வியாபாரத்தில் பணம் முடங்கி கிடந்தால், அது கவலை தரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களும் வேலையில் சில சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். வருமானத்துடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான செலவு தொடர்ந்து இருக்கும். குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தற்காப்புடன் வாகனம் ஓட்டுங்கள். இந்த நேரத்தில் நோய், துக்கம், காயம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்டகால நோய் திரும்பவும் துன்பம் விளைவிக்கலாம்.
காதல் உறவில், மிகவும் கவனமாக இருங்கள். காதல் துணையின் உணர்ச்சிகளை புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக, உங்கள் உறவைப் பற்றி வெளியே காட்டிக்கொள்ள வேண்டாம். அதனால் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. குழந்தைகளுடன் தொடர்புடைய எதுவும், மிகவும் கவலையடையச் செய்யும்.
சிம்மம்: குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முனையும் போது, கருத்து வேறுபாடுகள் மோதலாக மாற, ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். வாரத்தின் பிற்பாதியில் செய்யப்படும் எந்த வேலை தொடர்பான எந்தப்பயணமும் வெற்றிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
இது இறுதியில் லாபகரமான நிறுவனங்களில் சேர வாய்ப்பளிக்கும். மனம் கவர்ந்தவருடன் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். உங்கள் உறவில் கருத்து வேறுபாடுகளால் விரிசல் ஏற்படாமல் தவிர்க்க, ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாவிட்டால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ முடியாது.
கன்னி: செலவு அதிகமாக இருக்கும். ஆடம்பரத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதன் விளைவாக, சற்று மனம் வருந்துவீர்கள். காதல் துணைக்கு உண்மையாக இருங்கள் மற்றும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கவனமாக இருங்கள். இல்லையென்றால், உறவு முறிவதற்கு வாய்ப்புள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்தைப் பற்றி சற்று கவலை ஏற்படலாம்.
துலாம்: வியாபாரத்தில் போட்ட பணத்தை எடுப்பது சற்று சவாலாக இருக்ககூடும். பணத்தை கையாளும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வாரத்தின் நடுப்பகுதியில் மாணவர்கள் தங்கள் கல்வியில் ஆர்வம் காட்டாமல் போகலாம். இளைஞர்கள் அவர்களின் பெரும்பாலான நேரத்தை கேளிக்கை கூத்துகளில் செலவிடுவார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது அதிர்ஷ்டமான காலமாக அமையும். வீடு மற்றும் நிலங்களை வாங்குவதற்காகவும் அல்லது விற்பதற்காகவும் திட்டங்கள் வகுக்கப்படும். அன்பை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் வளரும். நீங்களும், உங்கள் காதல் துணையும் அதிக அன்பையும் நல்லிணக்கத்தையும் அனுபவிப்பீர்கள்.
விருச்சிகம்: போட்டித் தேர்வுகளில், மாணவர்கள் வெற்றி பெற நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வாரத்தின் பிற்பகுதியில், ஒரு முக்கிய நபருடன் ஒரு சந்திப்பு ஏற்படலாம். அது வருங்கால வாழ்க்கைக்கு நன்மை தரும். பணியாளர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலையில் இடமாற்றம் கிடைக்கலாம் அல்லது பதவி உயர்வு பெறலாம்.
வாழ்க்கைத்துணையின் சமீபத்திய சாதனை, குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். காதல் பந்தம் ஆழமாக வளரும். மனதை கவர்ந்தவருடன் மகிழ்ச்சியான நேரங்களை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை அன்பு மற்றும் ஆறுதலின் மறு உருவமாக இருப்பார்.
தனுசு: யாரையாவது நேசிக்கிறீர்கள் மற்றும் அதைத் தெரிவிக்க வேண்டும் என நினைத்தால் அதை உங்கள் வார்த்தைகளின் மூலமாகவே நிறைவேற்றுவீர்கள். காதலர்களுக்கு இடையே அதிக அன்பு இருக்கும். காதல் மனைவியுடன் அருமையான தருணங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை சுற்றுலா பயணங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எல்லாம் சாதாரணமாக இருக்கும்.
மகரம்: செல்வாக்கு மிக்க ஒரு நபரின் உதவியால் வியாபாரம் மற்றும் குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாதனையும் மகிழ்ச்சி மற்றும் மரியாதையின் முக்கிய காரணமாக மாறும். வலுவான ரொமாண்டிக் உறவுகள் இருக்கும். குடும்பத்தினர், உங்கள் காதலை அங்கீகரித்து திருமணத்திற்கு ஒப்புதல் கொடுக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையை ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கான சாத்தியம் உள்ளது. தினசரி பழக்க வழக்கம் மற்றும் உணவுப் பழக்கத்தின் மீது கவனம் வையுங்கள்.
கும்பம்: கடன், நோய் மற்றும் எதிரிகள் ஆகியவை ஆபத்தில் சிக்க வைக்கலாம். இதன் விளைவாக, பட்ஜெட்டில் சீர்குலைவு ஏற்படலாம். இதன் காரணமாக கடன் வாங்க வேண்டியிருக்கும். எவரேனும் முதுகுக்குப் பின்னால் உங்கள் திட்டங்களை நாசப்படுத்த முயற்சிகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
எந்தவொரு ஒப்பந்தங்கள் அல்லது திட்டங்கள் தொடர்பான எந்தவொரு ஆவணங்களிலும் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், பின்னர் சிக்கல்களில் சிக்கக்கூடும். நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும் என்று, கருதினால் ஒரு அனுபவமிக்க தனிநபர் அல்லது நலம் விரும்பியிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது சிறந்தது.
மீனம்: காதல் உறவு அல்லது திருமணம் ஆகியவற்றில் ஏதாவது மனஸ்தாபங்கள் சண்டை சச்சரவுகள் இருந்தால் அதைப் பற்றி உங்கள் கருத்தை வாதிடுவதை விட, மனம் விட்டுப் அதைப் பேசுங்கள். ஏனென்றால் வாதிடுவது ஏற்கனவே இருக்கும் பிரச்சினையை பெரிதுபடுத்தக் கூடும். இதை செய்யும்போது, உங்களுடைய மகிழ்ச்சியை குலைக்கும் நபர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள். வார இறுதியில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.