ETV Bharat / spiritual

Weekly Rasipalan: திருமணம் வரன் கைக்கூடும் வாய்ப்பு அதிகம்..அந்த அதிர்ஷ்டக்கார ராசி நீங்களா? - Weekly Rasipalan in tamil - WEEKLY RASIPALAN IN TAMIL

Weekly Rasipalan in tamil: ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan
Weekly Rasipalan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 7:45 AM IST

மேஷம்: இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. காதல் வாழ்க்கை வாழ்பவர்களின் நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும். விசேஷமாக ஒன்றும் இல்லை. மூன்றாம் நபரின் தலையீட்டால், திருமணம் ஆனவர்களின் வாழ்வில் குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்களின் செலவுகளை திட்டமிட்டு செய்யவும். முன்பு ஏதாவது முதலீடுகள் செய்து இருந்தால், அதனால், நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும்.

மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த நேரம். உங்களின் முயற்சி வெற்றிபெறும். உங்கள் ஆரோக்கியம் சற்று சீரற்றதாக இருக்கும். உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்வதின் மூலம் ஆரோக்கியம் மேம்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருப்பதால் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் வெளியே சென்று வருவதற்கான வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

ரிஷபம்: இந்த வாரம் ரிஷப ராசி நேயர்களுக்கு மிகவும் அமோகமான வாரமாக இருக்கக்கூடும். காதல் உறவுகள் இனிமை நிறைந்ததாக இருக்கும். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்வு சந்தோஷமும், சமாதானமும் நிரம்பியதாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். அவர்களோடு உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். இதனால், பணத்தை சேமிப்பது குறித்து கற்றுக் கொள்வீர்கள். இது பிற்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், சில நண்பர்களின் சகவாசத்தால், கவனம் சிதற வாய்ப்புள்ளது. உடன் பிறந்தோரின் கல்விக்காக பணத்தை முதலீடு செய்வீர்கள்.

மிதுனம்: திருமணம் ஆகாதவர்களுக்கு அவர்கள் மனதுக்கு பிடித்த நல்ல வரன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. காதல் வாழ்க்கையில் சற்று சலிப்பு ஏற்படலாம். திருமணம் ஆனவர்களின் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க உகந்த நேரம்; தங்களின் விருப்பமான பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். உங்களுடைய முந்திய நோய்கள் உங்களை விட்டு போவதால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் பெற்றோரின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்வார்கள். உங்களுடைய வீட்டுக்கு அருகில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வீர்கள். வியாபரத்தை விரிவுபடுத்த, சில பயணங்களை மேற்கொள்வீர்கள். அது லாபமகரமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போட்டித்தேர்வுகளுக்காக முயற்சி செய்யும் இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

கடகம்: இந்த வாரம் உங்கள் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ளோருடன் ஒரு புனித யாத்திரைக்கு செல்வீர்கள். அங்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வார்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணம் ஆனவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. பல வழிகளில் இருந்தும் பணம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. நிலுவையில் உள்ள உங்கள் பணிகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று சிரமம்.

உங்கள் பணியில் கவனம் செலுத்தவும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நீங்கள் நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள்; அதில் வெற்றியும் பெறுவீர்கள். மாணவர்களின் உயர்கல்விக்கு உகந்த நேரம். சிகரங்களை எட்டிப்பிடிப்பதற்கான வாய்ப்புள்ளன. ஆரோக்கியத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. அதேசமயம், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீட்டைவிட்டு வெளியே வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து வாடுவார்கள்.

சிம்மம்: திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தனிமையாக சில இனிமையான தருணங்களை செலவழிப்பீர்கள். காதல் விவகாரங்களில் சற்று கவனம் தேவை. தெரியாத இடங்களில் முதலீடுகளை செய்வது நல்லது அல்ல. வியாபாரத்தில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. சில நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரலாம். வியாபாரத்தில் உங்களுடைய கூட்டாளிகளுடனான உறவு பலப்படும்.

மாணவர்கள், அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொள்வது நல்லதல்ல. ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்படலாம். தூரத்து உறவினர்களிடம் இருந்து சுபசெய்திகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைமாற்றம் குறித்து சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் பணியில் இருந்து சற்று ஓய்வு எடுத்து, பிடித்தமான ஒன்றை செய்வீர்கள். அது உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் தாயார் உங்களோடு வந்து வசிப்பார்.

கன்னி: உங்கள் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி சிறிது கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. உங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான செயலில் வெற்றி பெறுவீர்கள்.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மனதை தேவை இல்லாத விஷயங்களில் அலையவிடாதீர்கள். அரசியலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. சகோதர, சகோதரிகளுடனான மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் தவறான சகவாசத்தால், பெற்றோருக்கு கவலை ஏற்படும். குழந்தைகள் விரும்பும் ஒன்றை நீங்கள் வாங்கித்தருவீர்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சிரமமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகள் சிறிது மாறுபட்டிருக்கும். காதலில் உள்ளோருடைய வாழ்க்கையில் விசேஷமாக ஒன்றும் இல்லை. காதலர்களுக்கு இடையே சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை சற்று ஏறத்தாழ இருக்கும். வரவும் அதிகரிக்கும் அதே சமயத்தில் செலவும் கூடும். உத்தியோகத்தில் உள்ளோருக்கு சற்று மந்தமான வாரம் தான். வேலையை மாற்றி கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள். உயர்கல்வி கற்க உகந்த நேரம். வெளிநாடு சென்று கல்வி கற்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தின் நலனுக்காக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து உழைப்பீர்கள். சிறு வியாபாரிகளுக்கு வியாபரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டில் பூஜை நடைபெறும். உறவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: இந்த வாரம் முழுவதும் சற்று ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள், தங்கள் காதல் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களின் இல்வாழ்க்கையில் சற்று பதற்றங்கள் ஏற்படலாம். மூன்றாம் நபரின் தலையீட்டினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் முதன்முதலில் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களின் திட்டங்கள் வெற்றிபெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று சிரமமான நேரம். பணியிடத்தில் இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கலாம். மாணவர்களுக்கு நல்ல குருவின் வழிகாட்டுதல் கிடைக்கும். அவரின் உதவியால் கல்வியை மேலும் தொடர்வார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தினசரி வாழ்க்கை முறையில் காலை நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வது மிகவும் நல்லது. உங்களின் கருத்துக்களை தந்தையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

தனுசு: காதல் உறவுகளில் சற்று ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஒரு சில விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். திருமணம் ஆனவர்கள், இல்வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை ஒரு புதிய வேலையில் சேருவார், அவருக்கு நீங்கள் முழு ஆதரவு தருவீர்கள். நிதி நிலை அமோகமாக இருக்கும். பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.

மகரம்: காதல் உறவில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியான வாரம். உங்களுக்கும், உங்கள் காதல் துணைக்கும் இடையே இடைவெளி குறையும். மூன்றாம் நபரின் தலையீட்டால் திருமணமானவர்களின் இல்வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எற்படும். புத்திர பாக்கியம் அமைவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் மனதில் உள்ளதை உங்கள் தந்தையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். பரம்பரை தொழிலை செய்பவர்கள், தங்களின் தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணவரவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

கும்பம்: நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனால் உங்களின் அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். காதல் துணையுடன் மனம் விட்டு சந்தோஷமாக பேசிக்கொண்டு இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார். உங்கள் குடும்ப நலனுக்காக நீங்கள் இருவரும் இணைந்து செயல்புரிவீர்கள். குடும்பத்தின் சில பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

மீனம்: உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அன்பையும், முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த விரிசல்கள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலைமை மேலும் வலுவடையும். கைக்கு வராமல் தடைபட்ட பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும். முன்பு செய்திருந்த முதலீட்டின் முழு பலனையும் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் முன்பை விட மேம்படும்.

இதையும் படிங்க: குழந்தைகளை வெளியே விடாதீர்கள்: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு! - Mayiladuthurai Leopard Photo

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.