ETV Bharat / spiritual

வார ராசிபலன்: நட்பு காதலாக மலர வாய்ப்புள்ளது! அந்த அதிர்ஷ்டசாலி யாரு? - வார ராசிபலன் - வார ராசிபலன்

Weekly Rasipalan in Tamil: மே 5ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

WEEKLY RASIPALAN IN TAMIL
வார ராசிபலன் (Image Credits to Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 7:36 AM IST

மேஷம்: உங்களின் செலவுகள் இந்த வாரத்தில் அதிகரிக்கலாம். ஆனால், வாரத்தின் இறுதியில் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் பால்ய கால நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதில் எழும். சந்தையில் பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு புனிதத் தலத்திற்கு யாத்திரை செய்வீர்கள் அது நல்ல பலனைத் தரும்.

வியாபாரம் செய்பவர்களின் வியாபாரம் பல்கிப் பெருகும் அதே சமயத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களைப் பற்றிக் கூற சிறப்பாக ஒன்றும் இல்லை. குடும்பத்தில் அனைவரின் அன்பும் ஆதரவும் இருப்பது நன்மையே தரும் என்றாலும், அது சில பழைய விவகாரங்களை நினைவுபடுத்தலாம். அதனால், தேவையில்லாத டென்ஷன் ஏற்படக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரியோரின் உத்தரவுகளைப் பின்பற்றுங்கள். புதிய வேலையைத் துவங்குவதற்கு சரியான காலம்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களின் மன உறுதியும், நல்லறிவும் மேன்மை அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பவும் வரும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் ஒருவர் மற்றொருவரை அக்கறையுடன் கவனிப்பார்கள்.

உங்கள் நிதி நிலைமையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், இதுவே சரியான தருணம். சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் உங்கள் வெற்றியானது, பதவி உயர்வையும் மற்றும் பணப் பரிசுகளையும் அள்ளித்தரும். ஆரோக்கியம் எப்போதும் போல் சாதாரணமாகவே இருக்கும். எதிர்பாராத மகிழ்ச்சியால் மனதும் உடலும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

மிதுனம்: நீங்கள் செய்யத் தவறிய பணிகளை இந்த வாரத்தில் செய்து முடிக்க சிலர் உங்களுக்கு உதவ முன்வரலாம். இது உங்கள் காதல் வாழ்க்கையிலிருந்த சில மனஸ்தாபங்களை நீக்கி அன்பை மலரச் செய்யும். வாரத்தின் முடிவில் உங்கள் ஆர்வம் மேலோங்கி, புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். திருமணமானவர்கள், தங்கள் இல்வாழ்க்கையில் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறியதால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்களின் பிறந்த ஊரை விட்டு மற்றொரு இடத்திற்குச் செல்லவேண்டி வரலாம். இதனால், அவர்கள் வாழ்க்கை மேன்மை அடைவதற்கான சரியான தருணம் இதுதான். ஆரோக்கியத்தைப் பற்றி சொல்வதென்றால், அது எப்போதும் போலவே இருக்கும். பயணம் செல்ல வேண்டி இருந்தால் வேண்டிய அளவு நேரம் எடுத்துக் கொண்டு உங்கள் முடிவை எடுங்கள்.

கடகம்: மங்களகரமான நிகழ்ச்சிகளான, பூஜை, ஹோமம் மற்றும் பஜனை போன்றவற்றை நடத்தத் திட்டமிடுவீர்கள் மற்றும் புனித தலங்களுக்கு யாத்திரை செல்வதினால் உங்களுக்கு மனதில் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு, இந்த வாரம் பரஸ்பர அன்பும், ஆசையும் கூடி ஒன்றாக இருக்கும். இந்த வாரத்தில் வீட்டில் உள்ள பெரியோர்கள் அவர்களின் ஆசீர்வாதமாக அதிக அளவில் பணத்தை பரிசாக கொடுப்பார்கள்.

இந்த வாரம், உங்களின் பொருளாதாரம், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம், சமூகத்தில் உங்களின் நிலை ஆகியவை வலுவாக இருக்கும். நவீன முறையில் வியாபாரம் செய்யும் போது, புதிய வழிமுறைகளைப் புரிந்துகொள்வதும், அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதைக் கவனமாகக் கருத்தில் கொள்வதும் அவசியம். கல்வி கற்க விரும்புபவர்களுக்கு, மிகவும் சாதகமான நேரம் இது.

சிம்மம்: வேலையின் முடிவுகள் வர சிறிது தாமதம் ஆகலாம். எதிர்பாராத விரைவான உல்லாசப் பயணங்கள் சாத்தியமாகும். வியாபாரத்தில் இணைந்து செயல்படுவது உங்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கொடுக்கும். இன்று செய்யப்படும் முதலீடுகளால் எதிர்கால நிதி ஆதாயங்களும் சாதகமான வாய்ப்புகளும் உருவாகின்றன.

கல்லூரியில் புதிதாக சேர்பவர்கள் கவனத்தை சிதறவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். எனவே, புதிதான அவர்களின் தேடலில், பழைய ஆய்வுகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அதிகப்படியான அவசரம் காரணமாக, ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது சற்று சவாலான நேரம்தான்.

கன்னி: வாரத்தின் முதல் பகுதியில் உடல் அளவில் சில காயங்கள் ஏற்பட்டாலும், இரண்டாவது பாதியில் தனித்துவமான நன்மைகள் இருக்கும். திருமணமான நபர்கள் தங்கள் வாழ்க்கையில் அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளை முடிக்க இது உதவும்.

திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு நல்ல மணமகன் கணவனாகக் கிடைக்கலாம். அன்பான தம்பதியினரிடையே பரஸ்பர அன்பு அதிகமாக உள்ளது. புதிய நட்பை உருவாக்கிக் கொள்வது எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவ்வாறு செய்வதால், புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சில முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்படும். வேலையை முடிக்கக் கூடுதல் விடாமுயற்சியும் மன வலிமையும் தேவைப்படும். இவை அனைத்திற்கும் நடுவில், உங்கள் எதிரிகள் உங்கள் கடமையை ஆற்ற முட்டுக்கட்டைப் போடுவார்கள். வியாபாரத்தில் வெற்றிபெற, வியாபாரம் செய்பவர்கள் போட்டிப்போடும் மற்ற வியாபாரிகளுடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். திருமணமானவர்களின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நண்பரின் உதவியால் மட்டுமே தீர்க்க முடியும்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பார்கள். வெளியூர் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும், இது வரை ஏற்றுக்கொள்ளப் படாத சில யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெற்றி பெறும். கூடுதலாக, இந்த வாரம் ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் காதல் துணையுடன் இனிமையான நேரத்தை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கலாம்.

விருச்சிகம்: நிலுவையில் உள்ள பிரச்சனைகள் அல்லது நீதிமன்றம் தொடர்பான பிரச்சனைகளை வாரத்தின் தொடக்கத்திற்கு முன்பே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பது அதிர்ஷ்டமாக இருக்கும். எந்தவொரு குறிப்பிட்ட துறையில் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் இந்த காலகட்டத்தில் பலனளிக்கும், மேலும், மக்களும் உங்களுடன் உடன்படுவார்கள். தொழில் வல்லுநர்கள் உத்தியோகத்தின் மூலம் பிற வருவாய் ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும்.

காதல் உறவுகள் இணக்கமாக இருக்கும். மேலும், உங்களின் மனம் கவர்ந்த முக்கியமான நபரிடம் இருந்து நீங்கள் ஆச்சரியமான பரிசைப் பெறலாம். இந்த கட்டத்தில், மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர உதவும் வகையில் ஒரு குருவின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். உங்களின் அன்றாட வாழ்க்கை ஒரு தனித்துவமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இது உங்களுக்கு உடல் மற்றும் மன வலிமையை வழங்கும்.

தனுசு: காலம் யாருக்காகவும் காத்து நிற்காது; எனவே, ஒரு அடி பின்வாங்குவதன் மூலம் இரண்டு அடிகள் ஒரே பாய்ச்சலாகத் தாவ உங்களை அனுமதித்தால், நீங்கள் அந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பணியில் இருக்கும்போது எந்தப் பொறுப்பாக்க இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சியுங்கள்.

மாணவர்கள் தங்கள் திறமையின் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கையுடன் இருப்பதால், படிப்பின் மீது அவர்கள் வைத்துள்ள கவனம் சிதற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று அமைதியான வாரமாக இருக்கும்.

மகரம்: எந்த ஒரு நாள்பட்ட அல்லது பருவகால நோய்களின் தொடக்கத்தின் காரணமாக இந்த நேரத்தில் நீங்கள் உடல் அல்லது மனதளவில் துன்பத்தை அனுபவிக்கலாம். வேலைக்காக ஓடிக் கொண்டிருக்கும் போது அன்பானவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். ஆகவே, உங்களின் ஆரோக்கியத்திற்கும் மேலாக உங்கள் உறவுகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால், இந்த வாரம் உங்கள் உணவு மற்றும் அன்றாட வழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் உறவுகளின் இனிமையைப் பாதுகாக்க உங்கள் குடும்பத்திற்கான நேரத்தையும் திட்டமிடுங்கள்.

இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு புதிய திட்டத்தில் முதலீடு செய்யும் போது நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு மகிழ்ச்சியான இல்வாழ்க்கைக்காக, உங்கள் பரபரப்பான ஓட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு என நேரத்தை ஒதுக்க வேண்டும். மாணவர்கள் போட்டிகளுக்காக தயாராகிறார்கள் எனில், வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: உங்கள் வணிகம் மற்றும் தொழில் வாழ்க்கையை கவனமாக மறுபரிசீலனை செய்து புதிய இலக்குகளுடன் இந்த வாரத்தைத் தொடங்கப் போகிறீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் அவற்றைச் செயல்படுத்த உங்களுக்கு உதவுவார்கள். வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் எதிர்பாராத தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இணைப்புகளை உருவாக்கும் மகிழ்ச்சிகளுமான பயணமாக இது மாறும்.

இந்த நேரத்தில் வீட்டைப் பழுதுபார்க்கவும் அல்லது அதன் உள் அலங்காரத்திற்காகவும் கூடுதலாக பணம் உங்கள் கையிலிருந்து செலவழியும். ஆனால், புதிய வருவாய் வழிகளும் உருவாக்கப்படும். எனவே, பண வரவு நீங்கள் எதிர்பாராத வகையில் அதிகமாக இருக்கும். நிலைமை கைமீறிப் போகும் கடினமான காலகட்டத்தில் உங்கள் மனைவியின் ஆதரவு உங்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கும். உயர்கல்விக்கு உகந்த காலம்.

மீனம்: இந்த வாரம் உங்கள் திறமைகளை மிகவும் திறம்பட பயன்படுத்துவதை நீங்கள் கவனிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நீங்கள் திறம்பட பயன்படுத்திக் கொள்வீர்கள். வாரத்தின் ஆரம்பத்தில், உங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான சில பயனுள்ள தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

மார்கெட்டில் ஏற்படும் எதிர்பாராத உயர்வு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் விரும்பும் நபர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட இந்த வாரத்தில் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும் நேரம் இது. மேலும் திருமணமானவர்களுக்கு குழ்ந்தை பெறும் பாக்கியம் கிட்டலாம்.

ஒரு நட்பு ஒரு காதலாக மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே இருக்கும் ரொமாண்டிக் பிணைப்பும் அதே நேரத்தில் வலுவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். பயண செலவுகள் அதிகரிக்கும், வாழ்க்கை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடுவீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.