மேஷம்: இன்றைய தினத்தில் உங்களது வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கவும். ஏதேனும் ஒரு பணியில் முழுமனதுடன் செயல்பட வேண்டும். அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக்கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம்: உங்களுக்குத் தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த ஒருவரை நீங்கள் இன்று சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு அவரை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. உங்களது வளமையான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றுவது சிறந்தது.
மிதுனம்: மேலதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில் உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற வெற்றியை கொண்டாடும் வாய்ப்புள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப்போடுவது நல்லது.
கடகம்: நீங்கள் தயக்கம் ஏதும் இல்லாமல் செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் விட்டு விட்டு பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும். பாதிப்புகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உங்கள் பணியை தொடரவும்.
சிம்மம்: இன்றைய தினம் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையை சிறிது மாற்றிக் கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
கன்னி: கூட்டாளித்துவ முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால் உங்கள் செயல்திறன் மூலம் மற்றவர்களை விட சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல் நீங்கள் உங்கள் பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.
துலாம்: மக்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள். அதைப்பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகளை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். உங்களது அணுகுமுறையின் மூலம் உங்களது கருத்துக்களை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம்: அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் மனப்பூர்வமாக சிந்திப்பீர்கள். உணர்ச்சிகளை இன்று கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால், இதன் மூலம் பொது மக்கள் உங்களை தவறாக புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புண்டு.
தனுசு: மேலதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.
மகரம்: வெளிப்படையான மற்றும் நேரடியான அறம் அணுகுமுறையின் மூலம் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மனதை நீங்கள் புண்படுத்தக்கூடும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை நீக்கவும், மனக்காயங்களை போக்கவும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இருந்தாலும், உறவுகளை சீர் செய்வதற்கான உங்களது முயற்சி எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் இருக்க வாய்ப்புள்ளது.
கும்பம்: இன்றைய தினத்தில் நீங்கள் காதல் வயப்படக் கூடும். திருமணம் ஆகாதவர்கள் காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பழைய புகைப்படங்களைப் பார்த்து மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மீனம்: ஒரே விதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் நீங்கள் கடுமையாக தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும்.