மேஷம்: நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் மகிழ்ச்சி கிடைக்கும். இது நிதி ஆதாயம் குறித்த செய்தியாக இருக்கலாம் அல்லது நண்பர்களைச் சந்திக்கும் செய்தியாக இருக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பீர்கள். அதற்கு சிறந்த வகையில் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: நடைமுறைக்கு ஏற்ற வகையில், விரிவாக செயல் திட்டத்தை தயாரித்து பணியாற்ற வேண்டும். இது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில், செயல்புரிய உதவியாக இருக்கும். உங்களது அகராதியில், தோல்வி என்பதே இல்லை. ஒரு நிபுணரைப் போல பணிபுரிவீர்கள்.
மிதுனம்: தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, திறக்கப்படாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாக தீர்க்கப்படும்.
கடகம்: இன்று செலவுகளை நன்றாக கட்டுப்படுத்துவீர்கள். எனினும், கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் செய்ய விரும்பமாட்டீர்கள். நெருங்கியவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயலும் போது இது உதவியாக இருக்கும். உங்களது வேலை தன்மையிலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிம்மம்: வாழ்க்கையில் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. கடின உழைப்பு தேவைப்படாத விஷயங்களில் கூட, நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். முயற்சியின் மூலம் நீங்கள் திறமையாக செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று மிகவும் அனுகூலமான நாள்.
கன்னி: சுற்றியுள்ளவர்கள் உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்கள் அறிவாற்றலும், அனுசரித்து செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தவும்.
துலாம்: முயற்சிகள் எதுவுமே வீண் போகாது. அது தற்போது பயன் அளிக்கவில்லை என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இன்று, நேர்காணலைப் பொருத்தவரை பொதுவாக ஆக்கப்பூர்வமான நாளாக இருக்காது. எனினும் முயற்சியை கைவிடாமல் இருந்தால், வருங்காலத்தில் அதற்கேற்ற பலனை அடைவீர்கள்.
விருச்சிகம்: அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு: குடும்பத்தினருக்கும், மனதுக்குப் பிடித்தவர்களுக்கும் இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் மூலம் உறவு பலப்படும். மாலையில், நண்பர்கள் வருகையினால் குதூகலம் அதிகரிக்கும்.
மகரம்: வாழ்க்கைத் துணையை தேடுபவராக இருந்தால், உங்கள் கனவில் வரும் நபரை நேரில் காணும் வாய்ப்புண்டு. வருங்காலத்திற்கான திட்டங்களை மேற்கொண்டு, உங்கள் காதல் துணையுடன் பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிபந்தனையற்ற அன்பு மற்றும் காதலின் காரணமாக பரஸ்பரம் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்: பல மணி நேர வேலைக்கு பிறகும், உடன் பணிபுரிபவர்கள், வேலையை நிறைவு செய்யாமல் சாக்குப்போக்கு கூறுவார்கள். உங்கள் பணியை முடித்துவிட்டு, பிறகு மற்றவர்களுக்கு உதவுவது குறித்து யோசிக்கவும். உங்களது வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருந்து, மன அழுத்தத்தைப் போக்குவார்.
மீனம்: இன்று உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவைக் கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.