மேஷம்: இன்று பிரச்சனைகள் மிகுந்த நாளாக இருக்கும். சில விஷயங்களில், நண்பர்களின் கருத்துக்கு நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றாலும், அவர்களுடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கும். நெடுநாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்துவிட்டதால், நிம்மதியாக உணர்வீர்கள்.
ரிஷபம்: உங்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்காது. எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், உங்களால் பிரச்னைகளையும், சிக்கல்களையும் தவிர்க்க இயலாது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்க விருப்பம் இல்லாமல், ஒன்றும் செய்யாமல் வருத்தமாக உணர்வீர்கள். அதனால் கடினமான அல்லது சிக்கலான பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். எளிமையான பணியில் கவனம் செலுத்துங்கள். இதுவும் கடந்து போகும் என்பதால் அமைதியாக, நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பது நல்லது.
மிதுனம்: எந்த குறிக்கோளை நோக்கி செல்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பதால், குறிக்கோளை அடைய இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குதூகலம் மற்றும் உற்சாகம் அதிகம் இருப்பதால், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உழைப்பிற்கு எதிர்பாராவிதமாக பலன்கள் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும்.
கடகம்: உணர்வு ரீதியான விஷயங்களால், வெற்றிப் பாதையில் தடைகள் ஏற்படும். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இது வருங்காலத்தை பாதிக்கும். உங்களுடைய திறமையான பேச்சு மற்றும் பணிவான அணுகுமுறையால், மக்களின் மனதைக் கவர்வீர்கள்.
சிம்மம்: அனைவரையும் அனுசரித்து ஒத்துழைப்புடன் பணியாற்றும் உங்களது மனப்பான்மையின் காரணமாக, மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். உங்களைப் போன்ற ஒத்த மனநிலை கொண்டவர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி: தனிப்பட்ட வாழ்க்கையில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் காரணமாக, தொழில் சிறிது பாதிக்கப்படலாம். சவால்களை சந்தித்து அதனை தீர்க்க முயற்சியை மேற்கொள்ளவும். உணர்வுகளுக்கு அடிமையாகாமல், முடிவுகளை உறுதியாக எடுக்கவும். குறிப்பாக, மாலை நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்: இன்று பணியிடத்தில் உங்களது செயல் திறன் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி மக்களைக் கவர்வீர்கள். கலை மற்றும் கலைநயம் மிக்க பொருட்கள் மீது உங்களுக்கு உள்ளார்ந்த ஆர்வம் இருக்கும். ஆகையால், இன்று புதிய கலைநயம் மிக்க பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.
விருச்சிகம்: இன்று பணியிடத்தில் ஏற்படும் வேலை தொடர்பான நெருக்குதல்களை சமாளிக்கும் திறமை உங்களுக்கு இருக்கும். வேலைப்பளுவின் காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. நாளின் முடிவில் யோகா, தியானம் அல்லது இசையை ரசித்தல் போன்றவற்றின் மூலம் அமைதியை நாடலாம்.
தனுசு: கெட்ட நேரங்கள் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லை. உறுதியான மனிதர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஆனால், கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து, பிரச்சனைகளை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உள்ளது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் கொடுக்கும் அறிவுரைகளைப் பின்பற்றவும்.
மகரம்: இன்று வேலை அதிகம் இருக்கும். திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் நல்லது. இதன்மூலம் வேலைப்பளு குறையும். பணியை மேற்கொள்ளும் போது, எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டால், பணியில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்கலாம்.
கும்பம்: உலகம் முழுவதிலும் இருந்து, நல்ல விஷயங்கள் ஏதோ ஒன்று உங்களை வந்தடையும். இன்று முழுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் மற்றும் மனதுக்குப் பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்: பணியைப் பொறுத்தவரை, கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. பணியிடத்தில் சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதால், மகிழ்ச்சியாக இருக்கவும். படிப்பதற்காக வெளியில் செல்ல விரும்புவர்களுக்கு, அது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு தங்கள் கனவுகளை நோக்கிச் செல்வார்கள்.