ETV Bharat / spiritual

ராசிபலன்; இன்று மகிழ்ச்சிகரமான நாள்.. எந்தெந்த ராசிகளுக்கு தெரியுமா? - தினபலன்

January 23 2024 Rasipalan: தை 9, ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 6:30 AM IST

மேஷம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு சாதகமான நாளாகவே இருக்கும். உங்களிடம் இருப்பவைகளைப் பற்றி நினைத்து நீங்கள் திருப்தியாக இருப்பீர்கள். அது தவிர, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு விஷயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பீர்கள். காதல் உறவுடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அது சச்சரவுகளை ஏற்படுத்தலாம். அது குறித்து நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, குதூகலமாகவும் அமைதியாகவும் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலைப் பொழுதில், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் குதூகலமாக நேரத்தைக் கழிக்கலாம் அல்லது இரவு உணவிற்காகவோ அல்லது திரைப்படம் பார்க்கவோ குடும்பத்தினருடன் செல்லக்கூடும். சூடான, மசாலாக்கள் நிறைந்த சுவையான உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகம் இருக்கும். இன்றைய பொழுதை குதூகலமாக நீங்கள் கழிக்கலாம்.

மிதுனம்: இன்று முழுவதும், உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். உங்கள் ஆற்றலையும், ஆர்வத்தையும் எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து நீங்கள் யோசிப்பீர்கள். மன நிலையிலும் பெரும் மாற்றங்கள் இருக்கும். தியான பயிற்சிகள் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், உங்கள் முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்படக்கூடும் வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் இருப்பவர்கள் உடன் கவனமாக பழகவும். சூழ்நிலைகளை புன்னகையுடன் எதிர்கொள்ளவும்.

சிம்மம்: உங்களுக்கு இருக்கும் அதிக தன்னம்பிக்கையின் காரணமாக, சிக்கலான விஷயங்களை தைரியமாக மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள், தங்கள் துறையில் மேம்பாடு அடைவார்கள். உங்கள் முழுத் திறமையைப் பயன்படுத்தி, உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்குவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள்தான் என்றாலும், உங்கள் அனுமானங்களை கட்டுப்படுத்தவும்.

கன்னி: இன்றைய தினத்தில், நீங்கள் சந்திக்கும் நிதி தொடர்பான சவால்களைச் சந்திக்க ஆவலாக இருப்பீர்கள். இதற்கு உங்களது வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமே காரணமாகும். பிரச்னைகளைத் தீர்க்க புதுமையான கருத்துக்கள் மற்றும் வழிமுறைகளை ஏற்படுத்துவீர்கள். உங்களுடைய தற்போதைய வர்த்தக யோசனைகள், சிறப்பான பலன்களை அளித்து ஆச்சரியங்களை அளிக்கும்.

துலாம்: உங்கள் மனதில் ஒளிந்திருக்கும் கலைஞர் இன்று வெளிப்படுவார். உங்கள் கற்பனைத் திறன்களையும் நீங்கள் வெளிக்காட்டுவீர்கள். இன்று, நீங்கள் ஆர்வமாக உள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆர்வமாக உள்ள துறையில் மேம்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயமாக உள்ள சட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இன்றைய தினம் ஒரு நல்ல வெற்றிகரமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்: நீங்கள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் மனநிலையில் இருப்பீர்கள். ஏக்கமான மற்றும் வருத்தமான சிந்தனைகளால் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், விரைவில் கைவிட்டுப்போன எதுவும் திரும்ப வராது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறி செல்வீர்கள்.

தனுசு: இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். நீங்கள் உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் நீங்கள் காதல் வயப்படுவீர்கள். எனினும், இது கவர்ச்சியின் காரணமாக வந்த ஈர்ப்பாக இருக்கலாம். தொடக்க கால உறவை கவனத்துடன் கையாளாமல் இருந்தால், உறவில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்களது புகழை பாதிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

மகரம்: உங்களது காதலர் மூலம் இன்ப அதிர்ச்சிகள் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் இன்று, உங்கள் காதல் துணை மீதான காதல் காரணமாக, அவரது ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இருவரும் கடைகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதன் காரணமாக அதிக செலவுகள் ஏற்படலாம். உங்கள் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். ஆனால் நாளின் இறுதியில், அதிக செலவின் காரணமாக சிறிது மனம் வருந்துவீர்கள்.

கும்பம்: இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் பயணத்தை தனியாக மேற்கொள்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் அழைத்துச் சென்றால், அவர்களது விருப்பமும், உங்களது விருப்பமும் வெவ்வேறாக இருந்து பயணம் மகிழ்ச்சி இல்லாமல் போகக்கூடும். எனினும், அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், சமரசம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும். உங்களது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ளும் உங்கள் திறமை, உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மீனம்: அலட்சியமான போக்கு, வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய தினத்தில், நீங்கள் பணியிடத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் பொறுப்புணர்ச்சியுடன் கவனமாக மேற்கொள்ளவும். எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரப்போகும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நெடுநாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் மற்றும் பிற செயல்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதற்கான பலன்களும் கிடைக்கத் தொடங்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.