ETV Bharat / spiritual

சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம்..மாறாத அன்பு வச்ச மகராசி.. தீர்க்க சுமங்கலி வரம் தருவாள் மீனாட்சி..! - Meenakshi Thirukalyanam

Meenakshi Thirukalyanam: மதுரை சித்திரை திருவிழாவால் கோலாகலம் பூண்ட மதுரையில், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

CHITHIRAI FESTIVAL Meenakshi Thirukalyanam
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 11:16 AM IST

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும், சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தாண்டு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8ஆம் நாளில், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும் , 9ஆம் நாளான நேற்றிரவு திக் விஜயமும் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், விழாவின் சிகர நிகழ்ச்சியாகும். அந்த வகையில், இந்த திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பையா், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர், நான்கு சித்திரை வீதிகளை சுற்றி வலம் வந்தனர். அப்போது, திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது.

இதையடுத்து, முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின் கோயில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப் பூக்கள், பச்சரிசி, நவதானியங்களால் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், பிரியாவிடையுடனும் சுந்தரேசுவரரும் தனித் தனியாக எழுந்தருளினர்.

திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலது புறம் பவளகனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடனும் எழுந்தருளினர். தொடர்ந்து, விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, சுவாமி மற்றும் அம்மனின் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டிய பின்னர் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்பு கட்டும் வைபவமும், அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.

தொடர்ச்சியாக மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாற்றும் நிகழ்வு நடைபெற்றதை அடுத்து கோயில் சார்பில் சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டுச்சேலைகளும் சாத்தப்பட்டது. பின்னர், தனது தங்கையான மீனாட்சியம்மனை பெருமாள் தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேஸ்வரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ரிஷப லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோயிலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோச முழங்கங்களுக்கிடையே மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன், பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துக் கொண்டனர்.மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது மட்டுமே அம்மன் உற்சவத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

அப்போது, 1823ஆம் ஆண்டு முன்னோர்களால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தீபாராதனை தட்டு மூலமாக அம்மனுக்கும் - சுவாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்கத்தால் ஆன 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா மூலமாக கல்யாண தம்பதிக்கு பன்னீர் தெளிக்கப்பட்டது.

திருகல்யாணத்தையடுத்து கோயிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு தாலிக்கயிறும், குங்குமமும் வழங்கப்பட்டது. முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 30 லட்சம் மதிப்பிலான 10 டன் வண்ண மலர்கள் குறிப்பாக, மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, நவ தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப் பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோயில் வளாகத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், அதிக வெயிலின் தாக்கம் இருப்பதால் 300 டன் தற்காலிக ஏசி பொறுத்தப்பட்டது. 1 லட்சம் பைகளில் தண்ணீர் பாட்டில் மற்றும் தாலிகயிறு அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருக்கல்யாண நிகழ்வில் கோயில் அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், நீதிபதிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக் கொள்வர்.

இந்நிலையில், மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து விருந்து உண்டு வருகின்றனர். இந்நிலையில், மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக மொய் செலுத்தி ரசிது பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் - Meenakshi Thirukalyanam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.