ETV Bharat / opinion

புதிய குற்றவியல் சட்டங்களால் ஏற்படக் கூடும் நிர்வாகச் சிக்கல்கள் என்ன? வழக்கறிஞர்கள் கூறுவது என்ன? - New Criminal Laws - NEW CRIMINAL LAWS

ஜூலை 1 முதல் நாட்டில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களால் பல்வேறு நடமுறை சிக்கல்கள் உருவாக்கக் கூடும் என வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய குற்றவியல் சட்டங்களால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்கள் என்னென்ன, அவை வழக்கறிஞர்களின் கண்ணோட்டத்தில் எப்படி உள்ளது என்பது குறித்து ஈடிவி பாரத்தின் சுமித் சக்சேனா விளக்குகிறார்.

Etv Bharat
Representational image (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 1:29 PM IST

ஐதராபாத்: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று சட்டங்களும் நேற்று (ஜூலை.1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கடந்த 1860 முதல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் அமலில் இருந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்‌ஷியா அதினியம் ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டன.

​​நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வாதிடும்போது, புதிய சட்டங்களால் ஓரளவுக்கு நிச்சயமற்ற சூழல் ஏற்படும் என்றும் பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், குற்றவியல் சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்த குறியீடுகள் முன்னோக்கி நகர்ந்துள்ளதா என்ற கருத்து எழுந்துள்ளது.

மேலும் புதிய குற்றவியல் சட்டங்களால் நாட்டு மக்களின் நீதிக்கான பாதை எளிதாக்கப்படுமா என்ற எண்ணமும் எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி கூறியதாவது, "புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து எழும் எந்த சவாலையும் சந்திக்க வழக்கறிஞர்கள் திறமையற்றவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக நாம் பல்வேறு துறைகளில் புதிய சட்டங்களை எதிர்கொண்டு வருகிறோம். 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பே புதியதாக இருந்தது. புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் வந்தது. எனவே, புதிய குற்றவியல் சட்டங்களால் பிரச்சனை இல்லை. மேலும், குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அதற்கான வழிகாட்தல்களை காட்ட உள்ளன.

நீதிமன்றங்களும் புதிய பிரச்சினைகளை கையாளத் தயாராக உள்ளன. தற்போது மொழிபெயர்ப்புகள் வேகமாக உள்ளன. அதனால் புதிய குற்றவியல் சட்டங்கள் விரைவில் அனைவரையும் சென்றடையும். மேலும் தென் மாநிலங்கள் ஆங்கிலம் பயன்பாட்டை ஆதரிக்கக் கூடியவை. தனிப்பட்ட முறையில் நான் புதிய சட்டங்களை வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகையில், "புதிய சட்டங்களைப் படிப்பதிலும், பெயரிடலை சரி செய்வதிலும் உள்ள சவாலை வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சமமாக எதிர்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், சில விதிகளில் பயன்படுத்தப்படும் தெளிவற்ற மற்றும் மிகையான மொழியால் சிக்கல்கள் எழும்.

மேலும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்சனைகள் அமைப்பு வழியாக பயணித்து, பல ஆண்டுகால வழக்குகளுக்குப் பிறகு தான் தீர்க்கப்படும். சீர்படுத்தப்பட்ட சட்டம், உடனடியாகக் கண்டறிய முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது, இருப்பினும் எதிர்காலத்தைப் பாதிக்கும்" என்று தெரிவித்தார்.

பழைய ஐபிசி, சிஆர்பிசி மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று புதிய சட்டங்களுக்கு விரைவில் மாறுவது என்பது வழக்கறிஞர்களுக்கு சவாலானது. அதுகுறித்து மூத்த வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் கூறுகையில், "இந்த மூன்று சட்டங்களையும் அவசரமாக அமல்படுத்துவதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கிறேன்.

குற்றவியல் சட்டங்கள், வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதிகள், காவல்துறை மற்றும் பொது மக்களுக்கும் பொருந்தும். இந்த மூன்று சட்டங்களில் புதிதாக எதுவும் இல்லை என்றும், புதிய சட்டங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பழைய சட்டங்களை மறுசீரமைப்பதாகவும், பிரிவுகள் மட்டுமே நினைவில் வைக்கப்படுவதாகவும், அனைத்து பங்குதாரர்களுக்கும் மிகப்பெரிய மற்றும் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அனைத்து குற்றவியல் சட்டங்களையும் நீக்கிவிட்டு, புதிய சட்டங்களைக் கொண்டு வரத் தேவையில்லை. சமூக சேவை போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த, அவை ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தப் புதிய சட்டங்களால் உச்ச நீதிமன்றத்தால் பல ஆண்டுகளாக தீர்வு காணப்பட்ட சட்டங்கள் பயனற்றதாகிவிடும்" என்று தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங் கூறுகையில், "ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய குற்றவியல் சட்டங்கள் தற்போதைக்கு வழக்கறிஞர்கள் மற்றும் நாட்டின் நீதிமன்றங்கள் மற்றும் மிக முக்கியமாக காவல்துறைக்கு சவாலாக இருக்கும். புதிய சட்டங்களை அமல்படுத்துவது தற்போது இரண்டு இணையான சட்டங்களை உருவாக்கியுள்ளது நாட்டில் குற்றவியல் நீதி அமைப்புகளை கடுமையாக பாதிக்கும்.

இருப்பினும், குற்றவியல் சட்டத்தின் கொள்கை புதிய சட்டங்களில் அப்படியே உள்ளது மற்றும் சில புதிய விதிகளை அறிமுகப்படுத்துவது சில சிறிய குற்றங்களை விரைவாக தீர்க்க வழிவகுக்கும். பழைய நிறுவனங்கள் சட்டம், 1956ல் இருந்து புதிய நிறுவனங்கள் சட்டம், 2013க்கு மாறுவதை நம் நாடு ஏற்கனவே கண்டுள்ளது.

MRTP சட்டம் 1969ல் இருந்து போட்டி ஆணைய சட்டப் 2002 முதலியன சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நடப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படடலாம் என்பது எனது கருத்து" என்று கூறினார். தமிழகத்தின் மூத்த வழக்கறிஞரும், கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான அமித் ஆனந்த் திவாரி புதிய சட்டங்கள் குறித்து கூறுகையில், "புதிய தண்டனைச் சட்டத்தின் அடிப்படை வாசகம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதால், புதிய பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறினார்.

புதிய வழக்கு பிரிவு எண்கள் மற்றும் அதற்கான முன்னுதாரணத்தைக் கண்டறிதல், புதிய சட்டங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளின் தெளிவற்ற மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றார். மேலும், அதிகாரிகளால் புதிய சட்டங்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்க நேரிடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நடைமுறைச் சட்டத்தில் கணிசமான மாற்றங்கள் உள்ளன, ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் உள்ள வழக்குகளுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட குற்றங்களுக்கு, பழைய அடிப்படைச் சட்டம் ஐபிசி-யே தொடரும், ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் பரிந்துரைக்கப்பட்டதாக இருக்கும் என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

மேலும், அதிகாரப்பூர்வமாக சட்டங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், புதிய குற்றவியல் சட்டங்களின் விதிகளைப் புரிந்து கொள்வதிலிருந்தும், குற்றவியல் நீதி அமைப்பில் திறம்பட பங்கேற்பதில் இருந்தும் நமது மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் ஒதுக்கிவிடுவார்கள். பிராந்திய மொழியில் விசாரணை நடத்தப்படும் கீழ் நீதிமன்றங்களில் வழக்குகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று ஆனந்த் திவாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழைய குற்றவியல் சட்டங்கள் Vs புதிய குற்றவியல் சட்டங்கள்! வித்தியாசம் என்ன? - New Criminal Laws

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.