ETV Bharat / opinion

இந்தியா - EFTA வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன பயன்? உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுமா? நிபுணர் கூறுவது என்ன? - India sign trade deal with EFTA

EFTA Trade Deal: 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக காணப்படும் இந்தியா, இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் பெற உள்ள பயன்கள் குறித்து டாக்டர் ராதா ரகுராமபத்ருணி விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 5:56 PM IST

ஐதராபாத் : இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு (EFTA) இடையே கடந்த மார்ச் 10ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இந்தியா - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சமமான வர்த்தகம் மற்றும் இளைஞர்களுக்கு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் 11வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து தற்போது 5வது பெரிய பொருளாதாரமாக முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வணிகம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய உயரத்தை தொடும் வகையில் பரந்த அளவிலான சீர்திருத்தங்களையும், எளிதாக வணிகம் செய்வதையும் நாடு மேற்கொண்டு வருகிறது.

EFTA என்பது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பாகும். ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்யும் இந்த கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதேநேரம் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு EFTA என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் கிடையாது.

இந்த ஐரோப்பிய சுதந்திர கூட்டமைப்பு EFTA, கனடா, சிலி, சீனா, மெக்சிகோ மற்றும் தென் கொரியா தற்போது இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் 29 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு உள்ளது. இதில் இந்தியாவுடனான ஐரோப்பிய சுதந்திர வர்த்த கூட்டமைப்பிம உறவு என்பது கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு EFTA உடன் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த EFTA நாடுகளுக்கு கடந்த 2022 -23 நிதி ஆண்டில் இந்தியா 1 புள்ளி 92 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை மேற்கொண்டு உள்ளது.

அதே காலக்கட்டத்தில் 16 புள்ளி 74 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி ஆனது நடைபெற்று உள்ளது. EFTA நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டுள்ளது. அது 2021 - 2022 நிதி ஆண்டில் 23 புள்ளி 7 பில்லியன் டாலராக அதிகரித்தும், 2022 -23 நிதி ஆண்டில் 14 புள்ளி 8 பில்லியன் டாலராக குறைந்தும் காணப்படுகிறது.

இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு இடையிலான இரு வழி வர்த்தக போக்குவரத்து கடந்த 2022 - 2023 நிதி ஆண்டில் 18 புள்ளி 65 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் ஒப்பிட்டு கூறும்போது 2021- 2022 நிதி ஆண்டில் அது 27 புள்ளி 23 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கூட்டளி நாடுகளுக்கு பல வகையான கெமிக்கல்கள், பாதி பதப்படுத்தப்பட்ட ரத்தின கற்கள், படகு மற்றும் கப்பல்கள், மருந்து மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை இந்தியா ஏற்றுமதி செய்து உள்ளது. அதேநேரம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை கடந்த 2000 ஏப்ரல் மற்றும் 2023 டிசம்பரில் சுவிட்சர்லாந்திடம் இருந்து பெற்று உள்ளது. சுவிட்சர்லாந்து இந்தியாவின் 12வது பெரிய முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் நார்வேயிடம் இருந்து 721 புள்ளி 52 மில்லியன் அமெரிக்க டாலர், ஐஸ்லாந்திடம் இருந்து 29 புள்ளி 26 மில்லியன் அமெரிக்க டாலர், லிச்சென்ஸ்டீனிடம் இருந்து 105 புள்ளி 22 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய நேரடி அந்நிய முதலீடாக பெற்று உள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பின் பங்கு என்பது 0.4 சதவீதமாகவும், இறக்குமதி 2 புள்ளி 4 சதவீதமாகவும் உள்ளது. இதில் வரி நீக்கம் என்பது இந்தியாவின் வர்த்தக பற்றக்குறைக்கு வழிவகுப்பதை காண முடிகிறது. இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் இருந்து ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு நாடுகளுக்கு கால்நடை பொருட்களான மீன், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய்கறி எண்ணெய் உள்ளிட்ட இதர பொருட்களை வரி விலக்குடன் ஏற்றுமதி செய்வதையே நோக்கமாக கொண்டு இருந்தது.

இந்த வர்த்தக ஒப்பந்த அம்சங்களுடன், உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடுகளை இந்தியா எதிர்பார்த்தது. தற்போதைய ஒப்பந்தத்தில் சரக்கு மற்றும் சேவை வர்த்தக ஒப்பந்தம், அறிவுசார் சொத்துரிமைகள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒத்துழைப்பு, அரசு கொள்முதல், வர்த்தகம் மற்றும் வர்த்தக வசதிக்கான தொழில்நுட்ப தடைகள் உள்பட 14 அத்தியாயங்கள் கொண்டு உள்ளன.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவில் முதலீடு செய்து 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு இடையிலான வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் முதலீட்டை சார்ந்தது மட்டுமில்லாமல் உலகின் சிறந்த தொழில்நுட்ப மூலதன நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவு, ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பேணுவதற்கான வாய்புகளையும் உருவாக்கி உள்ளது.

ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பில் நார்வேக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து தான் இந்தியா பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக காணப்படுகிறது. உலகின் மூன்றில் ஒரு பங்கு புதுப்புது வர்த்தக யோசனைகள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கான பொருளாதாரத்தை கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து காணப்படுகிறது.

புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கான உலகின் குறியிட்டில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது. கடைசி நிதி ஆண்டில் இந்தியா - சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிடையேயான இரு தரப்பு வர்த்தகம் என்பது 17 புள்ளி 14 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் ஏற்றுமதி 1 புள்ளி 34 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் இறக்குமதி 15 புள்ளி 79 பில்லியன் டாலராகும்.

கடந்த 2022- 2023 நிதி ஆண்டில் சுவிட்சர்லாந்துடான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 14 புள்ளி 45 பில்லியன் டாலராகும். சுவிட்சர்லாந்திடம் இருந்து 12 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம், 409 மில்லியன் டாலர் மதிப்பிலான இயந்திரங்கள், 309 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகள், 380 மில்லியன் டாலர் மதிப்பிலான கோகிங் மற்றும் ஸ்டீம் நிலக்கரி, 296 மில்லியன் டாலர் மதிப்பிலான எழும்பியல் மற்றும் ஒளியியல் தொடர்பான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்தியா இறக்குமதி செய்து உள்ளது.

மேலும், 211 புள்ளி 4 மில்லியன் டாலர் மதிப்பிலான கைக் கடிகாரங்கள், 202 மில்லியன் டாலர் மதிப்பிலான சோயா பீன் எண்ணெய், 7 மில்லியன் டாலர் மதிப்பிலான சாக்லெட், உள்ளிட்ட பொருட்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா பெரும்பாலும் ஏற்றுமதி செய்த பொருட்களாகும். அதேநேரம் கெமிக்கல்கள், ரத்தின கற்கள், நகைகள், படகு மற்றும் கப்பல்கள், இயந்திரங்கள், டெக்ஸ்டைல் சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவை சுவிட்சர்லாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களாகும்.

இந்தியாவின் பிரதான தங்கம் இறக்குமதியாளராக சுவிட்சர்லாந்து காணப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் ஏறத்தாழ 41 சதவீதம் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதியாகிறது. மற்ற விலைமதிப்பற்ற உலோக இறக்குமதியில் 5 சதவீத்தை சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

சுவிட்சர்லாந்தில் உலக புகழ்பெற்ற Novartis மற்றும் Roche ஆகிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகும். கடந்த 2022 -23 நிதி ஆண்டில் இந்தியா - நார்வே இடையிலான இரு வழி வர்த்தக போக்குவரத்து 1 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடனான ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு வர்த்தக நாடுகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அல்லது வரிக் குறைப்பு செய்கின்றன. பொரும்பாலான பொருட்களை சுங்க வரி பட்டியலில் இருந்து நீக்க சுவிட்சர்லாந்து முடிவு செய்து உள்ளதால் அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் உயர் தர சுவிட்சர்லாந்து பொருட்கள் இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் கூறுகையில், டூனா மற்றும் சாலமன் மீன்கள், ஆலிவ் மற்றும் அவகாடோ போன்ற பழங்கள், காபி, ஆலிவ் ஆயில், வைட்டமின் ஏ சத்துக்கள் கொண்ட cod liver ஆயில் போன்ற பல்வேறு எண்ணெய் வகைகள், விதவிதமான இனிப்புகள், சாக்லெட், பிஸ்கட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைந்த விலையில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்மார்ட்போன்கள், சைக்கிள் உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள், சுவர் மற்றும் கைக் கடிகாரங்கள், மருந்துகள், டை, டெக்ஸ்டைல் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் முதலியன உயர்தர சுவிட்சர்லாந்து பொருட்கள் இந்திய சந்தையில் விலைக் குறைவாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெட்டப்பட்ட மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட வைரக்கற்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்படும். ஒயின் இறக்குமதியில் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும் அதே அளவிலான சலுகை இந்தியாவுக்கு வழங்குவதாக முன்மொழியப்பட்டு உள்ளது.

5 டாலருக்கு குறைவிலான ஒயின்களுக்கு வரிச் சலுகை என்பது கிடையாது என்றும் 5 முதல் 15 டாலருக்குள் உள்ள ஒயின்களுக்கு 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக முதலாம் ஆண்டு வரிச் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் அது 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பிராந்திய ரீதியாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்தியா - பிரிட்டன் இடையிலான சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை என்பது அடுத்தகட்ட நிலையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 13 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு உள்ளது.

இதில் அண்மையில் மொரீசியஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா நாடுகளுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. தற்போதைய இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது வேளான் மற்றும் கால்நடை துறைகளை சார்ந்தது.

ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு நாடுகளிடம் இருந்து வரும் முதலீடுகளால் எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டின் சேவைகள் மற்றும் உற்பத்தி துறைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேளாண், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, டை மற்றும் கெமிக்கல்கள், விலையுயர்ந்த இயந்திரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, சேவை துறைகள் இந்த முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பின் விநியோகச் சங்கிலியை தற்போதைய மைய புள்ளியான சீனாவிலிருந்து பல்வகைப்படுத்தி இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை மற்றும் திறமையான தொழிலாளர் சக்தியை கொண்டு பயனடைய முடியும். மேலும், நார்வேயின் Sovereign wealth Fundல் இருந்து 1 புள்ளி6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் Green Technology Investmentsல் இருந்து 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓய்வூதிய மற்றும் பென்சன் நிதியில் இருந்து முதலீடுகளை பெற முடியும்.

டிஜிட்டல் வர்த்தகம், மருந்துகள், உயிரி தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் மற்றும் ரசாயனங்கள், நிதி மற்றும் வங்கித் துறைகள், உயர் தொழில்நுட்ப விவசாயம், விநியோகச் சங்கிலித் தளவாடங்கள் மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்ட துறைகளில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய விளிம்புடன் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவை ஆதரிக்க முடியும்.

மேலும், உற்பத்தி, விவசாயம் மற்றும் சேவைத் துறையில் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைவதற்காக, தன்னம்பிக்கை இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டும்.

இதையும் படிங்க : உணவு பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதார விலை திட்டங்களில் இந்திய எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? WTOல் எதிரொலிக்குமா இந்தியாவின் குரல்? - WTO Ministerial Conference

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.