ETV Bharat / opinion

1 கோடி வீடுகளுக்கு சோலார் மேற்கூரை சாத்தியமா? இலக்கு மற்றும் சவால்கள் என்னென்ன? - Pradhan Mantri Suryodaya Yojana

2024ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி சூரியயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் முலம் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று அறிவித்தார். இந்த திட்டம் நாட்டில் உள்ள 1 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக கூறினார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் 2 புள்ளி 2 ஜிகா வாட் அளவிலா சோலார் பேனல்கள் மட்டும் இந்திய வீடுகளில் நிறுவப்பட்டு உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பி.வி ராவ் விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 5:29 PM IST

ஐதராபாத் : அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் எரிசக்தி தேவை என்பது பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக நிலக்கரி மற்றும் பிற எரிபொருள் ஆதாரங்களை நம்பியிருக்கமால் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கும் சூழல் உருவாகி உள்ளது.

நிலக்கரி உற்பத்தி அதிகரித்து இருந்தாலும், 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை என்ற இலக்கை அடைய இந்தியா உறுதி கொண்டுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி, காற்றாலை, அணு உலை, நீர்மின் மின்சாரம் உள்ளிட்ட புதைபடிவமற்ற எரிபொருள் மூலதனங்களில் இருந்து 50 சதவீத மின் உற்பத்தியை பெருக்க நாடு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இந்த செயல்முறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் 30 சதவீத பங்களிப்புடன் நாடு ஏற்கனவே 43 சதவீதத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி சமீபத்தில் பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். 2024 இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த திட்டத்தில் பயனாளிகள் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவார்கள் என்றும், உபரி சூரிய சக்தியை விற்கலாம் என்றும், அதன் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம் என்றும் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏறத்தாழ 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாட்டில் உள்ள வீடுகளில் 2 புள்ளி 2 ஜிகா வாட் அளவிலான சோலார் கூரைகள் மட்டுமே நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டுக்குள் 40 ஜிகா வாட் அளவில் சோலார் கூரைகள் அமைக்க இலக்ககு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இலக்கு எட்டப்படாத நிலையில், 2026ஆம் ஆண்டு வரை அதன் காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டம் மூலம் ஏறத்தாழ 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, தங்களது அன்றாட மின் கட்டணங்களை குறைப்பதற்கு வழிவகை செய்யும். இந்த சோலார் மின்சார திட்டம் மூலம் நாட்டில் புது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகை செய்யும்.

மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா உலகளாவிய தலைமையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளுக்கு என குறிப்பிட்ட தகுதிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும், விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறக்கூடாது, விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மொபைல் எண், மின் கட்டணம், வங்கிக் கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் புகைப்படம், ரேஷன் கார்டு உள்ளிட்ட விண்ணப்ப சரிபார்ப்புக்கு தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

சோலார் மின்சார பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மானியம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் செயல்பட்டு வருகிறது. வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதும், ஆர்வமுள்ள குடும்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி நாட்டில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியானது சுமார் 73 புள்ளி 31 ஜிகா வாட்டாக அதிகரித்து உள்ளது. வீட்டின் கூரைகளில் சோலார் தகடுகள் பதிக்கப்படுவதன் மூலம் சூரிய மின்சாரம் சுமார் 11 புள்ளி 8 ஜிகாவாட் வரை இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், 2022ஆம் ஆண்டுக்குள் 40 ஜிகா வாட் என நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வெகு தூரம் செல்ல வேண்டியது உள்ளது.

சோலார் மின்உற்பத்தியில் நாட்டின் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அங்கு 18 புள்ளி 7 ஜிகா வாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 10 புள்ளி 5 ஜிகா வாட் என்ற அளவில் குஜராத் உள்ளது. அதேநேரம் வீட்டின் மேற்கூரைகளில் பதிக்கப்படும் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை தவிர்த்து மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் கூரைகளின் பதிக்கப்படும் சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தியில் 2 புள்ளி 8 ஜிகா வாட் என்ற அளவில் குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 1 புள்ளி 7 ஜிகா வாட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் தற்போதைய நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் என்பது 180 ஜிகா வாட்டாக உள்ள நிலையில், அதில் சோலார் மின் உற்பத்தி என்பது 72 புள்ளி 3 ஜிகா வாட்டாக உள்ளது.

அதைத் தொடர்ந்து நீர்மின் உற்பத்தி 46 புள்ளி 88 ஜிகா வாட்டாக உள்ளது. ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிக பங்களிப்பை கொண்டு இருந்தாலும், கூரைகளில் பதிக்கப்படும் சோலார் பேனல்கள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 40 ஜிகா வாட் என்ற இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது.

மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, சோலார் பேனல்கள் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், உற்பத்தியான 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை, குடியிருப்புத் துறைக்காக சுமார் 3 ஆயிரத்து 377 மெகா வாட் வரை ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 917 கோடியே 59 லட்ச ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சோலார் பேனல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 4 லட்சத்து 30 ஆயிரம் பயனாளிகள் பயனடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரியின் சூர்யயோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் 1 கோடி குடும்பங்களுக்கு சோலார் பேனல்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 1 கிலோ வாட் என நிறுவப்பட்டால், ஒரு கோடி குடும்பங்களுக்குத் தேவையான சோலார் மாட்யூல்கள், இன்வெர்ட்டர்கள், நெட் மீட்டர்கள் மற்றும் துணைக் கருவிகளின் அளவு என்பது 10 ஜிகாவாட் ஆகும். இது சோலார் பேனலில் நிறுவப்பட்ட மொத்த திறனில் 90 சதவீதம் ஆகும். 2026ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்த உபகரணங்கள் மற்றும் துணைக் கருவிகளை வழங்குவது என்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலாகும்.

மேலும், இந்த திட்டத்திற்கான உபகரணங்களை வெளி நாடுகளில் இருந்து பெறுவதில் உள்ள விநியோகச் சங்கிலி பாதிப்புகளை தவிர்க்க உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முன்வர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் ஸ்டார்ட் அப் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு மானியம் உள்ளிட்ட வசதிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

அதேநேரம் தற்போது உள்ள நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி, இணைப்பு, நிகர அளவீடு, மின்சார ஆய்வு மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவு வரம்புகளை உள்ளடக்கிய பேனல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்ற வகையிலான ஒற்றைச் சாளர வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க : குறைந்த அளவிலான காற்று மாசுவை சுவாசித்தாலும் மாரடைப்புக்கு வழிவகுக்குமா? நிபுணர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.