ETV Bharat / opinion

சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து! காற்றுமாசு குறித்து எச்சரிக்கும் ஆராய்ச்சி! கவனம் அவசியம் - CHENNAI CITY AIR POLLUTION - CHENNAI CITY AIR POLLUTION

CHENNAI CITY AIR POLLUTION: காற்று மாசு குறித்த லான்சட் பிளானட்டரி ஹெல்த் ஸ்டடி ரிப்போர்ட் என்ற (Lancet Planetary Health study report) சமீபத்திய ஆய்வறிக்கை காற்று மாசினால் இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் மரணமடைவதாக எச்சரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையிலும் கடலோரத்தில் இருக்கும் நகரம் என்பதால் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை நம்மால் உணர முடியிவில்லை என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் முதன்மை ஆசிரியர் முனைவர் பார்கவ் கிருஷ்ணா. ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை-க்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கத்தினை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

காற்று மாசுபாடு(கோப்புப் படம்)
காற்று மாசுபாடு(கோப்புப் படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 7:33 PM IST

ஹைதராபாத்:இந்தியாவில் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் 33 ஆயிரம் பேர் மரணமடைகிறார்கள் என்பதே அதிர்ச்சியளிக்கும் நிலையில், இது நாள் வரை நாம் மாசு குறைவான நகரங்கள் என நம்பிக் கொண்டிருப்பவை எல்லாம் உண்மையில் பாதுகாப்பானவை இல்லை என்கிறது லான்சட் பிளானட்டரி ஹெல்த் ஆய்வறிக்கை. WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் குறைவான தரநிலையை காற்று மாசுபாட்டிற்கான அளவுகோலாக இந்தியா நிர்ணயித்திருப்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய அரசு காற்று மாசுபாட்டிற்கான அளவுகோலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் முனைவர் பார்கவ் கிருஷ்ணா வலியுறுத்துகிறார். இனி அவரது உரையாடலைக் காணலாம்.

லான்சட் ஆய்வறிக்கை பற்றி எங்களுக்கு கூறுங்கள். இது இந்தியாவின் பல்வேறு மாநில வாரியாக காற்று மாசுபாடு பற்றியதாக இருக்கிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட ஆய்வு நடத்தப்படுவது இது தான் முதல் முறையா?

ஆம் நாடு முழுவதும் தரவுகளைக் கொண்டு நடத்தப்படும் ஆய்வுகளில் இதுவே முதன்முறை. இந்த ஆய்வை நடத்துவதற்கு எங்களுக்கு சுமார் 2 ஆண்டுகள் வரையிலும் தேவைப்பட்டது. குறைந்த காலத்தில் (Short term) காற்று மாசுபாட்டுக்கு உட்படுவது குறித்த தரவுகளை சேகரித்தோம். நாடு முழுவதும் 10 நகரங்களில் இந்த ஆய்வினை நாங்கள் நடத்தியிருக்கிறோம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஆய்வு நடத்தப்பட்டதில்லை. இதுவரையிலும் காணாத வகையில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் காற்று மாசினால் எப்படி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நிறுவியுள்ளோம். இது நாள் வரையிலும் காற்று மாசு என்பது வட மாநிலங்கள் மட்டுமே தொடர்புடையது என்பது போன்ற கருத்தியல் நிலவி வந்த நிலையில், முதன் முறையாக தென்னிந்திய மாநிலங்ளும் காற்று மாசின் பாதிப்பை சந்திக்கின்றன என்றார்.

இந்த ஆய்வறிக்கையில் PM 2.5 என்ற சொற்றொடரை அடிக்கடி படிக்கிறோம். இது என்னவென்று விளக்க முடியுமா?

எளிமையாக விளக்குவதென்றால், எந்த ஒரு எரிபொருளை எரிக்கும் போதும் 2 விதமான மாசுபாடு ஏற்படுகிறது. இந்த எரிதல் என்ற செயல்பாட்டின் போது மிக நுண்ணிய துகள்கள் காற்றில் பரவுகின்றன. இது தவிர வாயு நிலையில், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களும் உருவாகின்றன. இதில் PM 2.5 என்பது காற்றில் பரவும் அந்த நுண்ணிய துகள்களைக் குறிக்கிறது இதில் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 2.5 மைக்ரானுக்கும் குறைவான அளவைக் கொண்ட பார்ட்டிக்கிள் மேட்டர் என்பதால் இதனை PM 2.5 என குறிப்பிடுகிறோம். இது ஏன் ஆபத்தானது என்றால் இது உங்களின் நுரையீரலுக்குள் எளிதாக பயணிக்கிறது. ஏன் ரத்தத்தில் கலந்து பயணித்தும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்கிறது. இந்த PM 2.5 துகள்கள் நச்சுத்தன்மையுடையவை என்பதால் உங்களின் உடல்நலனில் அதிகபாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

இத்தகைய நச்சுவாயுக்களிலிருந்து நம்மை நாம் எப்படி தற்காத்துக் கொள்வது?

கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வட இந்திய மாநிலங்கள் குறிப்பாக டெல்லியில் மாசு அதிகமாக இருந்த நேரங்களில் என்.95(N95) முகக்கவசங்களுடன் மக்கள் பயணித்தார்கள். இந்த முகக்கவசங்களை கோவிட் நேரத்தில் அனைவரும் பயன்படுத்தியதையும் நாம் பார்த்தோம். இவை காற்று மாசிலிருந்தும் நம்பை பாதுகாக்க நன்றாக வேலை செய்கின்றன.

உங்களின் ஆய்வறிக்கையின்படி உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் இந்தியாவின் காற்று மாசுக்கான குறியீடு அதிகமாக உள்ளது. இது ஏன் கவலைக்குரியது?

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று WHO எனும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை என்பது உலக அளவிலான ஆதாரங்களின் அடிப்படையிலானது. முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலான ஆவணங்களை இந்த அமைப்பு தனது உறுப்பு நாடுகளுக்கு வழங்கியுள்ளது. எனவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வழிகாட்டு அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின் படி, 15 மைக்ரோ கிராம் கியூபிக் மீட்டர், அதாவது சதுர மீட்டர் பரப்பில் 15 மைக்ரோ கிராம் அளவிற்கு மிகாமல் இந்த PM 2.5 துகள்களின் அளவு இருக்க வேண்டும். இதுவே ஆண்டு சராசரியாக 5 மைக்ரோ கிராம் தான் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு தற்போது இந்தியாவில் டெல்லியை எடுத்துக் கொண்டால், நமது ஆய்வறிக்கையின் படி, டெல்லியில் சராசரி காற்று மாசு அதாவது PM 2.5 அளவு 110 மைக்ரோ கிராமாக உள்ளது. எனவே நாம் சராசரி அளவைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் 20 மடங்கு அதிகமான காற்று மாசினை எதிர் கொள்கிறோம். நம்முடைய தேசிய காற்று மாசு தரக்குறியீடு கடைசியாக 2009ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் நாம் இதனை மறு ஆய்வுக்கு உட்படுத்தவே இல்லை. இந்தியாவின் நிர்ணயப்படி 60 மைக்ரோ கிராம் அளவுக்கான PM 2.5 துகள்களின் அளவு பாதுகாப்பானது என சொல்கிறது. இந்த தர அளவைக் காட்டிலும் குறைவான இதே நேரம் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைக் காட்டிலும் அதிகமான காற்று மாசு கொண்ட நகரங்களில் மரணங்கள் ஏற்பட்டுள்ளதை எங்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளோம். எனவே இந்தியா நிர்ணயித்துள்ள தர அளவுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்கு போதுமானதாக இல்லை என்றார்

Short Term Exposure என உங்களின் ஆய்வறிக்கையில் நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள்?

48 மணி நேரத்தில் ஒரு மனிதர் சந்திக்கும் காற்று மாசின் அளவை நாங்கள் குறுகிய கால பாதிப்பு Short Term Exposure என குறிப்பிடுகிறோம்.

அதாவது குறைவான மாசு கொண்ட நகரங்களில் கூட காற்று மாசினால் மரணங்கள் நிகழ்வதாக நீங்கள் கூறுகிறீர்களா

இதற்கு உங்களின் முந்தைய கேள்வியுடன் சேர்த்து பதிலளிக்க விரும்புகிறேன். எது பாதுகாப்பான சூழல், எது பாதுகாப்பற்ற சூழல் என்ற காற்றின் மாசுபாடு குறித்த இந்தியாவின் தர நிர்ணயத்தை. இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டின் படி 60 மைக்ரோ கிராம் PM 2.5-க்கு குறைவான சூழல் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள் இந்த வரையறையின் படி பாதுகாப்பான நகரங்கள் தான். ஆனால் இங்கும் காற்று மாசுபாட்டினால் மரணங்கள் நிகழ்வதை நாம் காண்கிறோம். 2000 முதல் 4000 வரையிலான மரணங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் காற்று மாசுபாட்டால் இந்த நகரங்களில் நிகழ்வதை நமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே நாம் பாதுகாப்பானவை என நம்பும் நகரங்கள் உண்மையில் பாதுகாப்பானவை அல்ல, டெல்லியுடன் ஒப்பிடும் போது, இவை குறைவான காற்று மாசு கொண்டவை.

ஒருவர் காற்றுமாசுபாட்டினால் தான் மரணமடைந்தார் என்பதற்கு எந்த தரவுகளைக் கொண்டு நீங்கள் நிறுவுகிறீர்கள்?

இந்த ஆய்வு என்பது பெரும் மக்கள் தொகையின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாறுபாடுகளை கணக்கில் கொள்கிறோம். காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நாட்களில் ஏற்படும் மரணங்களில், வேறு ஏதேனும் பிரச்சனை இன்றி (heart disease levels, smoking rates, aging, lung conditions, diet, obesity) மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தால் இதனை காற்று மாசுபாட்டினால் ஏற்படும் மரணமாக கருதுகிறோம். இதற்காக குறிப்பிட்ட நாளின் காலநிலை போன்றவற்றையும் எங்களின் ஆய்வுக்காக எடுத்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் நான் வசிக்கிறேன். காலையும் மாலையும் நான் வேலைக்கு பொதுப் போக்குவரத்தில் சென்று திரும்ப வேண்டும். என்னை நான் எப்படி தற்காத்துக் கொள்வது?

நீங்கள் எந்த வகையான போக்குவரத்து வாகனத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, காற்று மாசுக்கான அபாயம் அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் காற்று மாசின் அளவு 800 முதல் 1000 மைக்ரோ கிராமாக இருக்கும். இது இந்தியாவின் நிர்ணயமான 60 மக்ரோ கிராம் என்பதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். திறந்த வாகனங்களான சைக்கிள், மோட்டார் சைக்கிள், பேருந்து போன்றவற்றில் பயணிக்கும் போது மாசடைந்த காற்றை சுவாசிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். இவ்வாறான சூழல்களில் நீங்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் பயணிக்கும் போது, மாசு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனைக்கு காரணம் இல்லை. வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை நேரடியாக நீங்கள் சுவாசிக்கிறீர்கள். இது நீண்டகால அடிப்படையில் கேன்சரைக் கூட ஏற்படுத்தலாம்.

காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரையிலும் சென்னையின் நிலை என்ன?

இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையின் காற்று மாசு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. ஆனால் கடற்கரையில் இருக்கும் நகரம் என்ற ஒரு சாதகமான அம்சம் சென்னைக்கு இருக்கிறது. கடலிலிருந்து வரும் காற்றினால் மாசுபாடு குறைவாக தோன்றுகிறது. இயற்கையாக சூழலியலில் ஏதேனும் சிறு மாறுபாடு ஏற்பட்டால் டெல்லிக்கு இருக்கும் நிலைமை தான் சென்னைக்கும் ஏற்படும் என்கிறார் பார்கவ் கிருஷ்ணா.

இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்களால் ஏற்படக் கூடும் நிர்வாகச் சிக்கல்கள் என்ன? வழக்கறிஞர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.