ETV Bharat / opinion

பாகிஸ்தானின் நட்பை தேடும் அமெரிக்கா? ஈரானுடன் சுமூக தீர்வு காண சுத்திவளைப்பு திட்டமா? இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? - US Pakistan Relations - US PAKISTAN RELATIONS

இஸ்ரேல் - காசா பதற்றம், இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில் பாகிஸ்தானுடன் நல்லுறவை புதுப்பிக்க அமெரிக்கா துடிக்க என்ன காரணம். அமெரிக்கா - பாகிஸ்தான் நட்புறவால் இந்தியாவுக்கு பாதிப்பா? சுமூகமா? என விவரிக்கிறார் அச்சல் மல்ஹோத்ரா.

Etv Bharat
US-Pak Ties (File Photo ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 1:21 PM IST

ஐதராபாத்: அண்மைக் காலமாக பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பார்வை என்பது சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் காணக் கூடிய வகையில் உள்ளது. பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் பாசம் உற்று நோக்கத் தூண்டுகிறது. பாதுகாப்பு மற்றும் அதற்கு அப்பாற்பட்ட வகையில் பாகிஸ்தானுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதன் தலைவர் ஷபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் பக்கம் அந்நாடின் மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தான் மீது தனது ராஜ்ஜியத்தை செலுத்திக் கொண்டு இருந்த நேட்டோ மற்றும் அமெரிக்காவுக்கு ஆசிய கண்டத்தில் உற்ற தோழனாக இருந்தது பாகிஸ்தான் தான். அப்படி அமெரிக்காவின் பாதுகாப்பு அம்சங்களில் பாகிஸ்தான் முக்கிய பங்காளியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தான் இருந்து படை விலக்கம் செய்ய அமெரிக்கா முடிவெடுத்ததை அடுத்து நிலைமை மாறியது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்ட பின் மேற்கொண்ட முக்கிய முடிவுகளில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ விலக்கமும் ஒன்று.

முன்னதாக முன்னாள் அதிபர் டிரம்ப் பதவிக் காலத்திலும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படைகளின் விலக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில் பாகிஸ்தான் - அமெரிக்காவுடனான உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

பாகிஸ்தானுடன் மீண்டும் நட்புறவை மேம்படுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் போதிலும், அந்நாட்டு பிரதமர்கள் இம்ரான் கான் மற்றும் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் பைடனுக்கு சுமூக உறவு இல்லாததே சற்று பின்னடவைவாக கருதப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் சர்வதேச பொருளாதார மீட்சிக்கான பாதையை வகுக்கக் விரும்பிய இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் பைடன் முறையாக செவி சாய்க்காதது, கடந்த 2022ஆம் அண்டு பாகிஸ்தானை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஒன்றாக விவரித்தது மற்றும் அந்நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கியது உள்ளிட்ட பல கசப்பான அனுபவங்கள் இரு நாடுகளுக்கு இடையே தடையாக அமைந்துள்ளன.

இதற்கிடையில், பாகிஸ்தானுக்கும் தாலிபானுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையால் பதட்டங்கள் அதிகரித்தன. தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான் எதிர்ப்பு பயங்கரவாத அமைப்பு TTPக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அமெரிக்காவின் உத்தரவின் பேரில் அல்லது வேறு விதமாக தலிபான் மீது ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானின் ஆசை நிராசையாக அமைந்தது.

2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகியதை அடுத்து பிராந்தியத்தில் அதன் ராஜாங்க முக்கியத்துவத்தை இழந்து பாகிஸ்தான் திணறத் தொடங்கியது. அமெரிக்காவின் இரட்டை பாதை கொள்கையின் ஒரு பகுதியாக, அதிபர் பைடன் பாகிஸ்தான் தலைமையுடனான அணுகூல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையானது, பாகிஸ்தானுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான பணிகளில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிப் பதவியேற்ற சில நாட்களில் அவருக்கு தனிப்பட்ட முறையாக அதிபர் பைடனிடம் இருந்து தூது சென்றதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மீண்டும் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் பைடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு எழுதிய கடிதத்தில், "நமது நாடுகளுக்கிடையேயான நீடித்த கூட்டாண்மை நமது மக்களின் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியமானது, மேலும் நமது காலத்தின் மிக அழுத்தமான உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களை சமாளிக்க அமெரிக்கா பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்கும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

விரைவில் அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் பாகிஸ்தானுடனான இந்த உறவு புதுப்பிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. உள்நாட்டில் தேர்தல் நடைபெற சூழலில் பல்வேறு எதிர்ப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கச் செய்யும் பைடனின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் மற்றும் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து மத்திய கிழக்கில் பெரிய மோதல் வெடிக்கும் அபாயத்தை அச்சுறுத்தும் பின்னணியில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் பைடன் எழுதிய கடிதம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பார்வையில், குறிப்பாக ஈரான் - பாகிஸ்தான் இடையே உள்ள நெருக்கம் தங்கள் பக்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்கா நினைக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனிடையே இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் அதிபரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் கவனம் பெற்றது.

கலவரங்களுக்கு மத்தியில் நடந்த உள்நாட்டு தேர்தலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு வந்த முதல் வெளிநாட்டு தலைவர் என்பதன் காரணமாகவே ஈரான் அதிபர் சுற்றுப்பயணம் உற்று நோக்க வேண்டிய ஒன்றாக மாறியது. மேலும் பாகிஸ்தானின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ஈரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் பாதையை நிறைவு செய்வது குறித்து இரு தரப்பும் விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சுருக்கமாக கூற வேண்டுமெனில் பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா அதன் எதிரி வட்டத்தில் உள்ள ஈரானின் நட்பை பெற திட்டமிடுவதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தனக்கான காரியங்களை செய்து கொள்ளவும், நலன்களை பாதுகாக்கவுன் ஈரானின் உதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதே சமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தீவிர எதிரியான ஈரானின் செல்வாக்கு வட்டத்திற்குள் பாகிஸ்தான் விழுவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஈரான் அதிபர் பாகிஸ்தான் வந்து செனற பின்னர் அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது உற்று நோக்க வேண்டியதாக காணப்படுகிறது.

இந்த பயணத்தின் போது பாதுகாப்பு தவிர வேறு பல விஷயங்கள் இருதரப்புகளுக்கு மத்தியில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவைப் பற்றி கவலைப்படுவதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றால் பெரும்பாலும் அதற்கு இல்லை என்பது தான் பதிலாக காணப்படுகிறது.

முன்னர் பாகிஸ்தானுடன் அமெரிக்கா வலுவான கூட்டணி வைத்து இருந்த போதிலும், அமெரிக்காவுடனான இந்தியாவின் நட்புறவு சுமூகமாகவே இருந்தது. மேலும், பெரும்பாலான நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தங்களது உறவுகளை ஒரு சேர கொண்டு செல்லவே விரும்புகிறார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது.

அதேபோல், இந்தியா-அமெரிக்க உறவுகளில் உள்ள முக்கியத்துவத்தை போல் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லிணக்கத்தினாலும் பாதிக்கப்பட முடியாத அளவுக்கு முக்கியமானது என்பது தான் நிதர்சன உண்மை.

இதையும் படிங்க: வெங்காய ஏற்றுமதி தடைக்கான நீக்கம்! கதறும் நேபாளம், ஆனந்த கண்ணீரில் வங்கதேசம்! என்ன காரணம்? - India Lift Onion Export Ban

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.