ETV Bharat / opinion

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், சாத்தியமான சில தீர்வுகளும்! - Crimes against women - CRIMES AGAINST WOMEN

Crime against Women: பெண் குழந்தைகளுக்கு எதிராக நம் சமூகத்தில் தொடர்ந்து வன்கொடுமைகள் நிகழ்ந்துவரும் சூழலில், இக்குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, குற்றவாளிகளை தண்டிப்பதில் துரிதமாந சட்ட நடவடிக்கைகளும் அவசியமாகிறது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம் (Credits - Getty Images)
author img

By Justice Madan Lokur

Published : Aug 28, 2024, 10:58 PM IST

ஹைதராபாத்: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் எழுப்பி உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் 15 வயதே ஆன சிறுமி, நண்பர்கள் தினத்தில் விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்காத ஒரே காரணத்துக்காக அவர் ஓடும் ரயிலின் முன்பு தள்ளப்பட்டார்.

இதேபோன்று மதுராவைச் சேர்ந்த விடவைப் பருவ இளம்பெண், தமக்கு ஃபேஸ்புக்கில் வந்த நட்பு அழைப்பை ஏற்க மறுத்ததால் கொல்லப்பட்டார். மகாராஷ்டிராவில் பத்லாபூரில் உள்ள ஓர் பள்ளியில் 3 மற்றும் 4 வயது குழந்தைகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்று பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் ஏராளம். இவற்றில் சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. பெண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழும்போதெல்லாம் ஆதங்கமும், வருத்தமும் படும் சமூகம் கொஞ்ச நாளில் அவற்றை மறந்துவிடுதாகவே உள்ளது.

ஆனால், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையாக இருந்தாலும் சரி...மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மதுரா ஆகிய இடங்களில் சிறுமிகளுக்கு நிகழ்ந்த கொடுமையாக இருந்தாலும் சரி... இவையனைத்தும் கொடூரமான சம்பவங்கள் தான்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: குழந்தைகள் செய்யும் குற்றங்களைப் போல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனேகமாக தலைப்புச் செய்திகள் ஆவதில்லை. உதய்பூரில் 10 ஆம் வகுப்பு மாணவன் பழைய பகையின் காரணமாக சக மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, ஒரு பெரியவர் ஓர் பெண் குழந்தையைக் கொன்றது அல்லது பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான செய்திகளை அறியும்போதும் இச்சமூகம் அதிர்ச்சியடைகிறது. ஆனால், இதுபோன்ற எத்தனை குற்றங்கள் இதுவரை புகாரளிக்கப்பட்டுள்ளன அல்லது விவாதிக்கப்படுகின்றன?

மாநிலவாரியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளிவிவரம்
மாநிலவாரியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளிவிவரம் (Credits - ETV Bharat)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளன. இந்த குறிப்பிட்ட ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகள் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ், மொத்தம் 1,62,449 வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டைவிட 8.7% அதிகம். இதில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும்.

இரண்டாவதாக, அந்த ஆண்டில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக 62,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் (போக்சோ) பதிவாகியுள்ளன. இது சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதை காட்டுகின்றது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக தொடர்ந்து நிகழ்த்தப்படும் இதுபோன்ற அநீதிகளுக்கு முடிவுகட்ட ஒரு சமூகமாக நாம் என்ன செய்கிறோம்? என்ற கேள்வி எழுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (Credits - ETV Bharat)

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இந்த நீதிமன்றங்களில் சுமார் 3,00,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக NCRB தரவுகள் தெரிவிக்கின்றன. அவை எப்போது முடிவுக்கு வரும்? இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள்? பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எப்போது நீதி கிடைக்கும்? என்ற அடிப்படை கேள்விகள் எழுகின்றன.

சில சாத்தியமான தீர்வுகள்: பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தான் தற்போது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வருகிறது. இது தவிர, பெண் சிசுக்கொலை, பாலியல் இச்சைகளுக்காக பெண் பிள்ளைகளை கடத்துவது போன்ற கொடூர குற்றச் செயல்களும் நம் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றை நம் சமூகம் பெரிய குற்றங்களாக கருதுகிறாரா என்ற கேள்வி் எழுகிறது. இக்கேள்விக்கான விடையாக, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதி வழங்கல் முறையிலும் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு துரிதமாக நீதி கிடைக்கும் விதத்திலும், குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்படும் வகையிலும் நமது நீதிபரிபாலன முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்க முடியாவிட்டால், பிறகு பெண்களை தாய். சகோதரி, மகள் என்று வர்ணிப்பது அர்த்தமற்றதாகிவிடும். இதேபோன்று அநீதி இழைக்கப்படும் பெண் பிள்ளைகளுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்க முடியாமல் போனால். அவர்களை நாட்டின் எதிர்காலம் என்று கூறுவதும் அர்த்தமற்றதாகிவிடும்.

இறுதியாக, அரசியலை விவாதத்திலிருந்து விலக்கி வைப்போம். ஒரு கொடூரமான குற்றம் நிகழும்போது அதை அரசியலாக்குவது அந்த குற்றத்தை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்யாது. இன்னும் வளராத குழந்தைகளுக்கு நடக்கும் குற்றத்தின் பின்னணியில் ஏன் அரசியல் இருக்க வேண்டும்? ஒரு கொடூரமான குற்றம் நடந்தால், அதை வைத்து அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் வெற்று விமர்சனங்களில் ஈடுபடுவதைவிட, நம் குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், நீதி வழங்குவதற்கும் அவர்கள் தங்களது ஆற்றலைச் செலவழித்தால் சமுதாயத்திற்கு நல்லது.

இதையும் படிங்க: பாஜக ஒருபுறம்.. மருத்துவர்கள் மறுபுறம்..போராட்ட களமான மேற்கு வங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.