இன்றைய வாழ்க்கை முறை, தவறான உணவுப்பழக்கம் காரணமாக முடி உதிர்தல், வழுக்கை, முடி வறட்சி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்காத ஆட்களே இருக்க முடியாது. இப்போது இருக்கும் சூழ்நிலையில், முடி வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதை விட இருக்கின்ற முடியை எப்படிக் கொட்டாமல் பார்த்துக்கொள்வது என கவலைப்பட ஆரம்பித்து விட்டோம்.
இதற்கெல்லாம், நாம் பாரம்பரிய எண்ணெய்யான விளக்கெண்ணெய் தீர்வு என்றால் நம்ப முடிகிறதா? மூட்டு வலி, தோல் பராமரிப்பு, முடி வளர்ச்சி என அனைத்திற்கு இந்த எண்ணெய் அற்புதம் செய்யும் என்கிறார்கள். இப்படி இருக்க, முடி பிரச்சனைக்கு இந்த விளக்கெண்ணெய்யை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
முடி வளர்ச்சிக்கு: விளக்கெண்ணெய்யுடன் சிறிது தேங்காய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரத்திற்குப் பின் குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கூடுதலாக, முடி ஆரோக்கியமாகவும் சாஃப்டாகவும் வளரும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தவும்.
முடி உதிர்வைத் தடுக்க: விளக்கெண்ணெய்யைச் சூடாக்கி, கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற வைத்து தலைக்குத் தேய்த்து, அரை மணி நேரம் பின் குளித்தால் முடி உதிர்வு நாள்படக் குறையும்.
முடி வெடிப்பை நீக்க: சிறிது விளக்கெண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து வாரத்திற்கு ஒரு முறை முடி முழுவதும் நன்றாகத் தேய்த்து தலைக்குக் குளித்து வந்தால், வெடிப்பு பிரச்சனை ஒரு மாதத்தில் சரியாகும்.
பொடுகு பிரச்சனை வராமல் இருக்க: விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யுடன் அரை எலுமிச்சை பழச்சாற்றைச் சேர்த்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
முடி வறட்சி குறையும்: உங்களுக்கு முடி வறட்சியாக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி வறட்சி நீங்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்