ETV Bharat / lifestyle

புத்தாண்டை வரவேற்க சூப்பரான பால் பாயாசம்..ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க! - PAAL PAYASAM RECIPE

வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சேமியா பாயாசத்தை புத்தாண்டைன்று ஒரு முறை செய்து பாருங்கள். ஈஸியான சேமியா பாயாசம் ரெசிபி இதோ!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 17, 2024, 4:01 PM IST

புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், புத்தாண்டைன்று செய்யக்கூடிய ஈஸியான இனிப்பு ரெசிபியை உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம். புத்தாண்டின் முதல் நாளில் பல வகையான உணவுகளை சமைத்து, குடும்பத்தோடு உண்ணும் மகிழும் போது, இந்த சுவையான சேமியா பாயாசம் கூடுதல் மகிழ்ச்சியை தரும். மறக்காமல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பால் - 2 லிட்டர்
  • சேமியா - 100 கிராம்
  • சர்க்கரை - 250 கிராம்
  • மில்க் மெய்ட் - 400 கிராம்
  • முந்திரி - 1 கைப்பிடி
  • உலர் திராட்சை - 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பால் பாயாசம் செய்முறை:

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடனதும், சிறதளவு நெய் விட்டு இரண்டாக உடைத்து வைத்த முந்திரியை சேர்த்து வறுக்கவும். முந்திரி லேசாக சிவக்க ஆரம்பித்ததும், அதனுடன் உலர் திராட்சையை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.
  • இப்போது, அதே பாத்திரத்தில் உள்ள நெய்யில் சேமியாவை சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • அடுத்ததாக, தண்ணீர் சேர்க்காத காய்ச்சின பாலை ஆறவைத்து சேர்த்து, அதனுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள்.
  • பால் நன்கு பொங்கி வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கை விடாமல் கிளறவும். பின்னர், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்போது பால் கொதித்து வரும் போது, மில்க் மெய்ட் சேர்த்து கலக்கவும். அதனுடன், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து, நாம் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான மற்றும் இனிப்பான பால் பாயாசம் ரெடி. புத்தாண்டன்று இந்த பாயாசத்தை செய்து ஆண்டை இனிப்பாக ஆரம்பியுங்கள்.

இதையும் படிங்க:

90's கிட்ஸ் ஃபேவரைட் தேன் மிட்டாய் சாப்பிட வேண்டுமா? இப்படி செஞ்சி பெட்டிக்கடை நினைவுகளை ரிவிசிட் செய்யுங்க!

வீட்டிலேயே டேஸ்டியான 'Brownie' எப்படி செய்வது என பார்ப்போமா? சரியான அளவீடுகள் இதோ!

1 கப் பாசிப்பருப்பு இருந்தால் 'செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை' ரெடி..பாரம்பரிய இனிப்பை பக்குவமா இப்படி செய்ங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.