ETV Bharat / lifestyle

இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்..ஆந்திரா ஸ்டைல் 'இஞ்சி சட்னி' செய்வது எப்படி?

இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு பெஸ்ட் காமினேசனாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியை எப்படி செய்வது என பார்க்கலாம்..

author img

By ETV Bharat Lifestyle Team

Published : 3 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - ETVBharat)

சட்னி என்றால் ஞாபகத்திற்கு வருவது தக்காளி சட்னியும், தேங்காய் சட்னியும் தான். ஆனால், ஒரு முறை புளி, வெல்லம் என அறுசுவையின் கூட்டாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியை செய்து பாருங்க. நிச்சயம் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒன்றாக மாறிவிடும். இந்த சட்னி சுவை மட்டுமில்லாமல் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? எதற்காக யோசனை..உடனே செய்து அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்:

  • சிவப்பு மிளகாய் - 50 கிராம்
  • இஞ்சி - 50 கிராம்
  • புளி - 50 கிராம்
  • வெல்லம் - 100 கிராம்
  • பூண்டு - 6 முதல் 7 பல்
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
  • சீரகம் 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • சட்னி தயார் செய்வதற்கு முதலில், தேவையான இஞ்சியை தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கி தனியாக வைக்கவும். மேலும், ஒரு சிறிய பாத்திரத்தில் புளியை ஊற வைக்கவும். பின்னர், வெல்லத்தை நன்றாக தட்டி தனியாக வைக்கவும்.
  • இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சிறிது சூடானதும், உளுத்தம்பருப்பு, வேர்கடலை மற்றும் மல்லித்தூள் சேர்த்து மிருதுவாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
  • அதன் பிறகு சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக, நறுக்கிய இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பிறகு, அடுப்பை அணைத்து, சூடு போகும் வரை தனியாக வைக்கவும்.
  • இந்த செய்முறையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இஞ்சி அளவிற்கு சமமாக சிவப்பு மிளகாயை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தரமான காய்ந்த மிளகாயைத் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சட்னி சுவையாக இருக்காது.
  • இப்போது ஒரு மிக்ஸி ஜாரில், நாம் வதக்கி வந்த கலவையை சேருங்கள் கூடுதலாக தட்டி வைத்துள்ள வெல்லம், புளிச் சாறு, பூண்டு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • இவற்றுடன் சிறிது கொதிக்கும் தண்ணீரை சேர்த்து, சட்னி பதத்திற்கு அரைத்தால் போதும் ஸ்பைசி மற்றும் சுவையான இஞ்சி சட்னி ரெடி.
  • இங்கு இன்னும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், சட்னியை அரைக்கும் போது குளிர்ந்த நீரை சேர்த்தால், சட்னி விரைவில் கெட்டுவிடும்.
  • சட்னியை அரைத்த பின்னர், சிறிது கொதிக்க வைத்த எண்ணெயைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தால், சுமார் 2 முதல் 3 மாதங்கள் வரை சட்னி கெடாமல் அதே சுவையுடன் இருக்கும்.
  • எண்ணெய் ஊற்றாமல் வெளியில் வைத்திருந்தால் குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.