ETV Bharat / lifestyle

இட்லி,தோசை,சப்பாத்திக்கு அம்சமா இருக்கும் 'பூண்டு தொக்கு'..இப்படி செய்தால் 10 நாள் ஆனாலும் கெடாது!

வீட்டிலேயே சுவையான மற்றும் அனைத்து வகை உணவுக்கும் பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும் பூண்டு தொக்கை எப்படி ஈஸியா செய்வது என பார்க்கலாம்...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 9, 2024, 1:57 PM IST

வகை வகையான சட்னி வகைகளை இட்லி, தோசைக்கு செய்து சாப்பிட்டாலும் , வாய்க்கு ருசியாக இருக்கும் இந்த பூண்டு தொக்கை ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறம், எப்பவும் இதை தான் கேப்பீங்க. ரொம்ப ஈஸியாக வீட்டிலேயே பூண்டு தொக்கு எப்படி செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • பூண்டு - 1 கப்
  • இஞ்சி - 1 துண்டு
  • காய்ந்த மிளகாய் - 6 முதல் 10
  • புளி - 1 எலுமிச்சை பழம் அளவு
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • வெல்லம் - சின்ன துண்டு
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

பூண்டு தொக்கு செய்முறை:

  • முதலில், ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்குங்கள். காய்ந்த மிளகாய் கருகாமல் இருக்க, அடுப்பை மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருங்கள்.
  • பின்னர், மிளகாய் நிறம் மாறி சிவந்து வந்ததும், தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, அதே எண்ணெய்யில் தோல் உரிக்கப்பட்ட பூண்டை சேர்த்து வதக்குங்கள்.
  • அடுத்ததாக, அதனுடன் இஞ்சி, சீரகம் சேர்த்து வதங்குங்கள். இப்போது, புளியை சேர்த்து 2 நிமிடங்களுக்கு பூண்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில், வறுத்து வைத்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர், அதனுடன், நாம் வதக்கி வைத்த கலவை மற்றும் வெல்லம் சேர்த்து நைசாக அரைத்து எடுத்தால் சூப்பரான, சுவையான பூண்டு தொக்கு தயார். 10 நிமிடங்களில் செய்யக்கூடிய பூண்டு தொக்கை செய்து அசத்துங்கள்..

குறிப்பு:

  1. மிக்ஸி ஜாரில் அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீர் சேர்த்தால் நீண்ட நாட்களுக்கு தொக்கை சேமித்து வைக்க முடியாது.
  2. இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதம் குறிப்பாக தயிர் சாதத்துடன், இந்த தொக்கை வைத்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்டில் இருக்கும்.

இதையும் படிங்க:

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பூண்டு இட்லி பொடி செய்வோமா? 10 நிமிடம் போதும்!

இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்..ஆந்திரா ஸ்டைல் 'இஞ்சி சட்னி' செய்வது எப்படி?

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.