ETV Bharat / international

"எங்கள் மண்ணில் கால் வைக்கக்கூடாது" - ஐ.நா. சபை பொதுச் செயலாளருக்கு தடைவிதித்த இஸ்ரேல்! - Israel Ban UN Chief

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

இஸ்ரேலில் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது பற்றி அன்டோனியோ குட்டரெஸ் பதில் அளிக்கவில்லை. "பழிவாங்கும் வகையிலான வன்முறை அதிகரித்து வருவது நிறுத்தப்பட வேண்டும். இந்த மோதல் மத்திய கிழக்கில் உள்ள மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதை நோக்கி செல்கிறது," என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (imgae credits-AP)

டெல் அவிவ்/ஐக்கியநாடுகள்: ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேலில் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஈரான்-இஸ்ரேல் போர் மேலும் சிக்கலான ஒன்றாக மாறக்கூடும்

புதன்கிழமையன்று இது குறித்து அறிவித்த இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் வருவதை விரும்பவில்லை. இஸ்ரேலில் நுழைவதற்கு அவருக்கு தடைவிதிக்கப்படுகிறது," என்றார்.

ஐநா சபை பொதுச்செயலாளர் நுழைவதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது?

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹாமஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்கியது ஆகியவை குறித்து சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக ஐநா சபை பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவிக்கவில்ல்லை என்பதால் இஸ்ரேல் இது போல அவருக்கு தடை விதித்துள்ளது.

இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், "ஈரான், ஹமாஸ் செயல்களை விமர்சிக்க தவறியதன் மூலம் இஸ்ரேலில் நுழைவதற்கான தகுதியை யாரும் பெற முடியாது. இஸ்ரேல் தமது குடிமக்களுக்கு ஆதரவாக நிற்கிறது. ஐநா சபை பொதுச்செயலாளர் ஆதரவுடனோ அல்லது ஆதரவு இல்லாமலோ இஸ்ரேலின் குடிமக்களின் கவுரவத்தை நாங்கள் பாதுகாக்கின்றோம்," என்று கூறியுள்ளார்.

காட்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " ஈரானின் கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காத யாரும், இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதியற்றவர்கள். உலகத்தில் உள்ள எந்த ஒரு நாடாக இருந்தாலும் இதைத்தான் செய்யும்," என்று கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு சிக்கல் குறித்து ஐநா சபை பொதுச்செயலாளர் என்ன கூறினார்?

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் தொடுத்தப்போது மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பது குறித்து ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்திருந்தார். இந்த பதற்றம் குறித்து பேசும் போது இஸ்ரேல் அல்லது ஈரான் என நாட்டின் பெயர் எதையும் அவர் குறிப்பிடவில்லை. "மத்திய கிழக்கின் சிக்கல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மேலும் விரிவடைவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன்," என்று எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: காசாவின் கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல்.. 32 பேர் உயிரிழப்பு

இது தவிர, லெபனான் மீதான தாக்குதல் குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார். லெபானின் இறையான்மைக்கு மதிப்பளிக்கும்படி இஸ்ரேலை அவர் வலியுறுத்தியிருந்தார். " லெபனானில் அதிகரிக்கும் மோதல் எனக்கு தீவிரமான கவலை அளிக்கிறது. உடனடியாக மோதலை நிறுத்த வேண்டும். எந்த விலை கொடுத்தேனும் லெபானில் போர் தவிர்க்கப்பட வேண்டும். லெபானின் பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்திருந்தார்.

காசா குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், "ஐநா பொதுசபையின் பொதுச்செயலாளர் என்ற வகையில் முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகளின் அளவு அதிகரித்திருப்பதற்கு சாட்சியாக இருக்கின்றோம். காசாவில் கடந்த சில மாதங்களாக காணப்படும் மரணங்கள், பேரழிவை நான் ஒரு போதும் பார்த்ததில்லை," என்று கூறினார்.

இந்த நிலையில் ஐநா சபையின் சார்பில் புதன் கிழமையன்று தெரிவிக்கப்பட்ட கருத்தில், ஐநா அமைப்பு இஸ்ரேலுடன் தொடர்ந்து இருக்கவே விரும்புகின்றது. அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தடை குறித்து ஐநாவின் கருத்து

செய்தியாளர்களிடம் பேசிய ஐநா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், இதை ஐநா சபை மீது இஸ்ரேல் அரசு மேற்கொண்ட இன்னொரு தாக்குதலாக பார்க்கின்றோம் ," என்றார்.

ஐநா பாரபட்சமாக செயல்படுகிறது என்று இஸ்ரேல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து இது மேலும் அதிகரித்திருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.