ETV Bharat / international

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? - தொழிலாளர் கட்சி ஆட்சியில் இந்தியா - பிரிட்டன் உறவு எப்படி இருக்கும்? - uk election 2024

வழக்கறிஞராக இருந்து பிரிட்டனின் பிரதமர் எனும் உயர் பொறுப்புக்கு வந்துள்ளார் தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர். இவரது தலைமையிலான ஆட்சியில் இந்தியா- பிரிட்டன் இடையேயான ராஜாங்கரீதியான உறவு எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அவரது மனைவி விக்டோரியா
பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அவரது மனைவி விக்டோரியா (Image Credit - AP Photos)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 6:01 PM IST

புதுடெல்லி: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சியின் வெற்றியை அடுத்து, இதுநாள்வரை பிரிட்டன் பிரதமராக இருந்துவந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக்கிற்குப் பதிலாக கெய்ர் ஸ்டார்மர் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

யார் இந்த ஸ்டார்மர்?

1962 செப்டம்பர் 2 ஆம் தேதி பிறந்த ஸ்டார்மர், ரிகேட் கிராமர் பள்ளியில் தமது பள்ளிப்படிப்பையும், லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் எட்மண்டிலும் சட்டம் பயின்றார். 2015 ஆம் ஆண்டு முதல் ஹால்பார்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதிகளின் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவரான இவர், தீவிர அரசியலில் இறங்குவதற்கு முன் 2008 முதல் 2013 வரை, அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். தீவிர அரசியலுக்கு வந்தபின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பை வகித்துவந்த ஸ்டார்மர், ஏப்ரல் 2020 இல் இருந்து, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.

கடந்த 2019 பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வி அடைந்தது. அதன்பின், ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு மாற்று சக்தியாக தொழிலாளர் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். தமது நோக்கத்தின்படியே இன்று கன்சர்வேடிவ் கட்சிக்கு மாற்றாக, தொழிலாளர் கட்சியை நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரிட்டனில் ஆட்சியமைக்க செய்து ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஸ்டார்மர்.

பிரிட்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் உடனான நல்லுறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை தமது தேர்தல் அறிக்கையில் முக்கியமாக குறிப்பிட்டிருந்த ஸ்டார்மர், 'ஹிந்துஃபோபியா' எனப்படும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களை வன்மையாக கண்டிப்பதாக தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டார்மர் கூறியிருந்தார். பிரிட்டன் வாழ் இந்தியர்கள் தீபாவளி, ஹோலி போன்ற ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், பிரிட்டன் மற்றும் இந்திய மக்கள் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த முடியும் எனவும், பிரிட்டன் வாழ் இந்தியர்களின் பரஸ்பர வளர்ச்சிக்கு பங்களிப்பாற்ற இயலும் என்றும் நம்புகிறார் கெய்ர் ஸ்டார்மர்.

பிரிட்டன் தேர்தல் முடிவும்; இந்தியாவுடனான உறவில் தாக்கமும்

இந்தியா - பிரிட்டன் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் தமக்குள்ள விருப்பத்தை கெய்ர் ஸ்டார்மரின் தேர்தல் அறிக்கையிலும் வெளிப்படுத்தி இருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாட்டையும், இந்தியாவுடன் கட்டற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்வதை அவர் நோக்கமாக கொண்டுள்ளதையும் அவரது தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது. மேலும் கல்வி, காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்தவும், இந்தியாவை வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக அங்கீகரிப்பதில் கெய்ர் ஸ்டார்மர் நாட்டம் கொண்டுள்ளார் என்பதையும் அவரது தேர்தல் அறிக்கை கோடிட்டு காட்டியிருந்தது.

இருப்பினும், ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கான பல்வேறு கொள்கைகள் வகுக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தொழிலாளர் கட்சியின் ஆட்சியில் பிரிட்டன் - இந்தியா உறவு எப்படி இருக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத், புதுடில்லியில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை நிபுணரான டாக்டர் சௌரோகமல் தத்தாவிடம் கேட்டபோது, " உலகப் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவின் இந்த மாபெரும் எழுச்சியை பிரிட்டனின் புதிய பிரதமர் புரிந்து கொள்வார்; ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்து வருவதை கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சியும் புரிந்து கொள்ளும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, பிரிட்டனின் புதிய அரசு மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாகவோ, அதேசமயம் நடுநிலையாகவோ இருக்காது என்றே தெரிகிறது. கடந்த காலங்களில் தொழிலாளர் கட்சி ஆட்சியின்போது இந்தியா - பிரிட்டன் இருதரப்பு உறவுகள் எப்படி இருந்தது என்பதை வைத்தே இப்படி சொல்ல வேண்டியுள்ளது. முந்தைய தொழிலாளர் கட்சி ஆட்சிகளில், சீனா மற்றும் பாகிலஸ்தானுடன் பிரிட்டன் நெருக்கமாக நட்பு பாராட்டியது.

ஆனால், அதற்கு பிந்தைய ஆட்சியில் பிரிட்டன் - சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியலில் பாகிஸ்தான் காணாமல் போய் உள்ளது. ஆனாலும், மீண்டும் பிரிட்டனை ஆள உள்ள தொழிலாளர் கட்சியின் ஆட்சியில், சீனா, பாகிஸ்தான் உடனான பிரிட்டனின் அணுகுமுறையில் பெரிய அளவில் மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

அதேசமயம், உலகப் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவின் இந்த மாபெரும் எழுச்சியை பிரிட்டனின் புதிய பிரதமர் புரிந்து கொள்வார்; ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்து வருவதை கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சியும் புரிந்து கொள்ளும்" என்று சௌரோகமல் தத்தா கூறுகிறார்.

இதையும் படிங்க: "ஒட்டுமொத்த தேசமும் மறுசீரமைக்கப்படும்" - பிரிட்டனின் புதிய பிரதமராக உள்ள கியெர் ஸ்டார்மர் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.