வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு மத்தியில் வெளிநாட்டு பொருட்களுக்கு இந்தியா அதிக கட்டணங்களை விதிக்கிறது என்றும் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியா விதிக்கும் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
டெட்ராய்ட் பொருளாதார கிளப் உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றிய டிரம்ப்,"அமெரிக்காவை மிகவும் பணக்கார நாடாக ஆக்குவதில் முக்கியமான அம்சம் என்னவெனில், மீண்டும் நிவாரணம் அளிப்பதாகத்தான் இருக்கும். என்னுடைய திட்டத்தில் இந்த வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்றாகும். வேன்கள், சிறிய டிரக்குகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நடைமுறையை நான் தொடங்கினால், இது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நாம் உண்மையில் கட்டணம் விதிப்பதில்லை. எதிர்காலத்தில் சீனா 200 சதவிகிதம் கட்டணம் விதிக்கக்கூடும். பிரேசிலும் அதிக அளவுக்கு கட்டணம் விதிக்கும்.
இதையும் படிங்க : எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்! டிரம்ப் - எலான் மஸ்க் நேர்காணலில் சிக்கல்!
இப்போது அனைத்து நாடுகளையும் விட அதிக கட்டணங்கள் வசூலிப்பது இந்தியாதான். நான் இந்தியாவுடன் சிறப்பான உறவில் இருக்கின்றோம். குறிப்பாக மோடி மிகப்பெரிய தலைவர் உண்மையில் சிறந்த மனிதர். அதனை அவர்தான் கொண்டு வந்தார். அவர் சிறப்பான பணியைச் செய்துள்ளார். ஆனால், அவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
அநேகமாக பல வழிகளில் அதிகமாக அவர்கள் வசூலிக்க முடியும் என்று நினைக்கின்றேன். சீனா ஏற்ற கட்டணம் வசூலிக்கின்றது. இந்தியாவில் இருந்து வாங்குவதற்கு அவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். நான் அதிபராக இருந்தபோது விஸ்கான்சினை சேர்ந்த ஹார்லே டேவிட்சன் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார். அவரிடம் வணிகம் எப்படி நடைபெறுகிறது என்று கேட்டேன். அப்போது அவர் இந்தியா மிகவும் கடினமாக செயல்படுவதாகவும் 150 % அளவுக்கு கட்டணம் வசூலிப்பதாக கூறினார்,"என்று குறிப்பிட்டார்.