துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமனில் மசூதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டுல் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலைநகர் மஸ்கட் அடுத்துள்ள வதி கபீர் பகுதியில் இயங்கி வந்த மசூதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், சிலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் விசாரணை நடத்தி வருவதாக ஓமன் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், துபாக்கிச் சூடு ஏதேனும் கிளர்ச்சி கும்பலால் நடத்தப்பட்டதா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் ஓமன் ராயல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஓமனில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது அரிதானது என்பதால் வேறு எங்கும் இதே போன்று நடக்காமல் தடுக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் ரேஸில் இந்திய வம்சாவளியின் கணவர் போட்டி! டிரம்ப்பின் திடீர் தேர்வுக்கு என்ன காரணம்? - US President Election 2024