ETV Bharat / international

மியான்மர் தலைவர் ஆங் சன் சூகி வீட்டுச் சிறைக்கு மாற்றம்! என்ன காரணம்? - Myanmar Conflict - MYANMAR CONFLICT

மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலைவர் ஆங் சன் சூகி உடல் நலக் குறைவு மற்றும் வெப்ப அலை காரணமாக வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.

Aung San Suu Kyi
Aung San Suu Kyi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 12:30 PM IST

பாங்காக் : மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. வின் மிய்ன்ட், ஆங் சன் சூகி உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்றளவும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பல்வேறு ஊழல்கள் செய்ததாக மியான்மர் தலைவர் ஆங் சன் சூகி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்துவ் மியாமர் ராணுவம், அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து நய்பிடாவ் சிறைச் சாலையில் ஆங் சன் சூகி அடைக்கப்பட்டார். அதேபோல் முன்னாள் அதிபர் வின் மிய்ன்ட்க்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பகோ மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைவர்கள் கைது மற்றும் சிறைத் தண்டனையை எதிர்த்து போராடிய பொது மக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அங்கிருந்து தப்பியோடிய மக்கள் மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில், மியான்மரில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இதனால் சிறையில் உள்ள தலைவர்கள் கடுமையாக அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறையில் உள்ள ஆங் சன் சூகி மற்றும் வின் மிய்ன்ட் ஆகியோரை வீட்டுச் சிறைக்கு மாற்றுப்பட்டு உள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்து உள்ளது.

அதேபோல் எதிர்வரும் திங்யன் புத்தாண்டை முன்னிட்டு மியான்மர் சிறையில் உள்ள 3 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜாவ் மின் துன் தெரிவித்து உள்ளார். அதேநேரம் ஆங் சன் சூகி மற்றும் வின் மிய்ன்ட் வீட்டு சிறைக்கு மாற்றப்படுவது தொடர்பாக நாட்டு மக்களிடையே அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : காங்கிரஸ் குறித்து அவதூறு கருத்து - தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆர்-க்கு நோட்டீஸ்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.