ETV Bharat / international

மாஸ்கோ கான்சர்ட் ஹால் தாக்குதல் - பலி எண்ணிக்கை 133ஆக உயர்வு! வரலாற்றில் ரஷ்யா கண்ட பயங்கரவாத தாக்குதல்கள்! - Moscow Concert hall attack

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 1:27 PM IST

Moscow concert hall attack: மாஸ்கோ கான்சர்ட் ஹால் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் சம்பவம் இது எனக் கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள, குரோகஸ் சிட்டி அரங்கத்தில் பிரபல ரஷ்ய ராக் இசைக் குழுவின் பிக்னிக் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. சுமார் 6 ஆயிரத்து 200 பேர் அமரக்கூடிய அரங்கில் மக்கள் இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த சூழலில், தீடீரென அரங்கினுள் ராணுவ உடை அணிந்து நுழைந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், வெடிகுண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் உட்பட சுமார் 133 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், நிகழ்விடத்தில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தாக்குதலில் தொடர்புடையதாக 11 பேரை கைது செய்து உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் மற்றும் இரண்டு நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஏறத்தாழ 307 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல் கடந்த 2002 ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள தியேட்டரில் புகுந்த செச்சென் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில் தியேட்டரில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த நிலையில் அரங்கினுள் நுழந்த பயங்கரவாதிகள் ஏறத்தாழ 850 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

மேலும் அரங்கத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் பொறுத்தி வைத்து மிரட்டலில் ஈடுபட்டனர். செச்சென்சியா பகுதியில் முகாமிட்டு இருக்கும் ரஷ்ய படைகள் வெளியேறிக் கோரி பயங்கரவாதிகள் கோரிக்கை விடுத்தனர். இதில் பயங்கரவாதிகளுக்கும், ரஷ்ய பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஏறத்தாழ 40 பேர் வரை கொலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : மக்களவை தேர்தல்: காங்கிரஸ் 4வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - Lok Sabha Congress Candidates List

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.