ETV Bharat / international

“காசாவை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; 87 பேர் உயிரிழப்பு? - சுகாதார அமைச்சகம் அச்சம் - ISRAEL PALESTINE WAR UPDATE

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் 87க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று காசா சுகாதார அமைச்சகம் அச்சம் தெரிவித்துள்ளது.

காசாவில் நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
காசாவில் நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 10:25 PM IST

டெய்ர் அல் பலாஹ் முகாம்(காசா): வடக்கு காசா மீது இஸ்ரேல் இன்று நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் 87க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் டெய்ர் அல் பலாஹ் முகாமில் இருந்த 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட பீட் லாஹியா (Beit Lahiya ) என்ற இடம் கடந்த ஒராண்டாக இஸ்ரேலின் தரைப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் ஆள் நடமாட்டம் இருக்கும் வேலையில் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை.

இதையும் படிங்க: டெல்லி-லண்டன் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.... பிராங்க்பர்ட் திருப்பி விடப்பட்ட விமானம்

ஏற்கெனவே வடக்கு காசாவில் உள்ள நகரமான ஜபாலியா அகதிகள் முகாமில் கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வந்தது. அதற்கு காரணம் பாலஸ்தீனம் மீண்டும் தனது ஆதரவு ஹமாஸ் ஆயுதக் குழுக்களை அங்கு களமிறக்கி உள்ளதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததுதான். இந்நிலையில் இஸ்ரேல் ஏற்கனவே வடக்கு காசாவை அதிகளவில் பாதிப்படைய செய்தது. அதனால் இந்த தாக்குதலும் காசாவின் நிலையை மேலும் நெருக்கடியில் தள்ளி உள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் மூன்றில் ஒரு பங்கு உள்ள மக்களை போரின் தொடக்க வாரங்களில் தெற்கே வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் அந்த அறிவுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தியது. இதனால் பெரும்பாலான மக்கள் கடந்த மாதம் காசாவுை விட்டு வெளியேறினர். இந்நிலையில் தற்போது சுமார் 4,00,000 மக்களே வடக்கில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போரின் தொடக்கத்தில் வடக்கில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அங்கு திரும்பி வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.