கனடா: கனடா நாட்டில் உள்ள டொரன்டோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். பின்னர், இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த நபர்கள் ராஜீவ் வாரிக்கோ (51), அவரது மனைவி ஷில்பா கோதா (47) மற்றும் அவரது மகள் மாஹெக் வாரிக்கோ(16) என தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்து பீல் பகுதி போலீசார் தகவல் சேகரித்துள்ளனர். அதன்படி, ராஜீவ் வாரிக்கோ காஷ்மீரி பண்டிட் என்பதும், அவரது லிங்கிட் இன் கணக்கு மூலம் வாரிக்கோ, ஒண்டாரியோ சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதேபோல் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 நபர்களைக் கொண்ட குடும்பத்தினர், ஆனந்த் சுஜித், அவரது மனைவி அலைஸ் ப்ரியங்கா, மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தான் ஆகியோர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மியான்மரில் பதற்றம்: இந்தியர்கள் வெளியேறுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்!