மாபுடோ, மொசாம்பிக்: மாபுடோவின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் இருந்து தான் சர்வதேச சந்தைகளுக்கு பிரீமியம் சுருட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. புகையிலையின் கடுமையான நறுமணம் காற்றை நிரப்பினாலும், மர பெஞ்சுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள், புகையிலைகளை கவனமாக அடுக்கி சுருட்டுவதில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்துகின்றனர்.
இதில் முக்கியமானது என்னவென்றால், இலைகள் உலர்ந்திருக்க வேண்டும், அதே நேரத்தில் மென்மையாக இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தோலை ஒத்ததாக இருப்பது தான் இதன் தரத்தைத் தீர்மானிக்கிறது.
இறுதியாக கேமரூனில் இருந்து பெறப்பட்ட மென்மையான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பூச்சுக்கு பெயர் பெற்ற ஒரு ரேப்பர் இலையைக் கொண்டு முழுமையான சுருட்டை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு ரேப்பரும் பாதியாகப் பிரிக்கப்பட்டு சுருட்டைச் சுற்றி உருட்டுகின்றனர்.
இப்படியாக அதன் வெளிப்புற அடுக்கை உருவாக்குகின்றனர். ஆப்பிரிக்கன் சுருட்டுகள் இன்னும் பிரீமியம் தரத்தில் இருப்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்கிறார் 38 வயதான சுருட்டுகளைத் தயாரிக்கும் ஊழியர் யூஜினியா மவாய்.
மொசாம்பிக்கின் புகையிலை மரபு:
பெரும்பாலான போங்கனி புகையிலை மொசாம்பிக்கிலிருந்து வந்தாலும், சில தயாரிப்புகள் டொமினிகன் குடியரசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிலையைக் கொண்டுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்களுக்கு சுருட்டுகளை உற்பத்தி செய்வதில் புகழ்பெற்ற நாடாகும். காலங்காலமாக புகையிலை விவசாயத்தை செய்துவரும் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த அந்தோணி பாடிலா பெரெஸ் என்பவரால் இந்த சுருட்டுகள் தயாரிக்கும் பட்டறை 'போங்கனி' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
"ஒவ்வொரு புகையிலை இலைக்கும் தனித்தனி பங்கு உண்டு; அதன் எரியும் தரம், வலிமை மற்றும் நறுமணம்," என்று யூஜினியா மவாய் விளக்கினார். சுத்தமாக மொட்டையடிக்கப்பட்ட தலை, நேர்த்தியாக வெட்டப்பட்ட தாடியுடன் இவர் இருக்கிறார். சுருட்டு சுருட்டப்பட்டு, சுற்றப்பட்டவுடன், தொழிலாளர்கள் தேவையான அளவு முனைகளை ஒழுங்கமைத்து, பின்னர் 24 மணி நேரம் அவற்றை அச்சுகளில் வைத்து அவற்றுக்கான வடிவத்தைக் கொடுக்கிறார்கள். இறுதிப் படியாக ஒரு துளி காய்கறி பசையுடன் இணைக்கப்பட்ட சிறிய புகையிலையைப் பயன்படுத்தி நுனிப்பகுதியை சீர் செய்கின்றனர்.
இதையும் படிங்க |
சாதகமான சூழல்:
"மொசாம்பிக்கில் பிரீமியம் புகையிலையை வளர்ப்பதற்கு தட்பவெப்ப நிலை மற்றும் மண் நிலைகள் ஏற்றதாக இருக்கும்,” என்கிறார் பெரெஸ். மொசாம்பிக்கின் வளமான விவசாய நிலப்பரப்பு மற்றும் சாதகமான வானிலை சுருட்டு உற்பத்திக்கான இயற்கையான தேர்வாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
உயர்தர மூலப்பொருள் மட்டுமல்ல, உள்ளூர் பணியாளர்களின் திறமையான கைவினைத்திறனும் நாங்கள் தயாரிக்கும் போங்கனி சுருட்டுகளின் தனித்துவத்தை கூட்டுகிறது. சுருட்டுகளைத் துல்லியமாகக் கையால் சுருட்டும் பல தொழிலாளர்கள், ஒவ்வொன்றும் சர்வதேசத் தரத்தை அடைவதை உறுதிசெய்து, தயாரிப்புப் பணிகளில் உன்னிப்பாக கவனம் செலுத்த பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.