தெஹ்ரான்: ஈரான் அதிபராக இப்ராஹிம் ரய்சி உள்ளார். இந்த நிலையில், இவர் இன்று காலை அஜர்பைஜானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அரஸ் நதியில் கட்டப்பட்டுள்ள அணையை, அஜர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியீவ் உடன் இணைந்து ஈரான் அதிபர் ரய்சி திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் நாடு திரும்புவதற்காக ஹெலிகாப்டரில் ரய்சி பயணம் செய்துள்ளார். அப்போது மோசமான வானிலை நிலவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா நகரத்தின் அருகில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு 600 கிலோமீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அப்போது, ரய்சி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அதேநேரம், மேற்கொண்டு தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ஈரானிடம் பல்வேறு ஹெலிகாப்டர்கள் இருந்தாலும், அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டவை ஆகும். மேலும், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகள் நவீன உதிரி பாகங்கள் வாங்குவதற்கு இக்கட்டான சூழலை உண்டாக்கியுள்ளது எனலாம்.
இதையும் படிங்க: கிர்கிஸ்தான் வன்முறை; பாக். மாணவர்கள் 4 பேர் கொலை.. இந்திய மாணவர்கள் வெளியே வராதீங்க - தூதரகம் அறிவிப்பு! - Indian Students In Kyrgyzstan