ETV Bharat / international

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்காக அணு சக்தி-கூகுள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தால் சர்ச்சை

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்காக கூகுள் மேற்கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம் சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

பிரதிநித்துவ படம்
பிரதிநித்துவ படம் (Image credits-AP)

ஹைதராபாத்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் மின் சக்தி தேவைக்காக அணு சக்தியை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கூகுள் கையெழுத்திட்டுள்ளதாக திங்கள் கிழமை செய்தி வெளியாகி உள்ளது.

சிறிய அளவிலான மாதிரி அணு உலைகளை நிறுவ உள்ள நிறுவனத்திடம் இருந்து கூகுள் நிறுவனம் அணு சக்தி மின்சாரத்தை பெற உள்ளது. கூகுளின் இந்த ஒப்பந்த த்துக்கு அணு சக்தி முறைமை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. கூகுள் நிறுவனத்துக்காக மட்டுமே உருவாக்கப்படும் இந்த அணு உலைகள் இன்னும் கட்டமைக்கப்படவில்லை.அமெரிக்காவை சேர்ந்த கைரோஸ் பவர் என்ற ஸ்டார்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்துக்காக அணு உலைகளை உருவாக்கி அணு மின்சாரம் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் படி முதல் கட்ட அணு உலை 2030ஆம் ஆண்டு அமைக்கப்படும். கூடுதல் அணு உலைகள் 2035ஆம் ஆண்டு அமைக்கப்பட உள்ளன.

பசுமை குடில் வாயுக்களை அணு சக்தி வெளியிடாது என்றபோதிலும், அணுக்கழிவுகளில் இருந்து வெளியாகும் ரேடியோ கதிர்வீச்சு அபாயகரமானது என அறிவியலாளர்களும், வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே கூகுளின் இந்த ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரியாவின் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் காலநிலை மற்றும் ஆற்றல் நிபுணர் ரெய்ன்ஹார்ட் உஹ்ரிக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் ஆகியவை குறைந்த அளவு பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றுபவை. இவற்றை கூகுள் உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.