இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்): எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான மாநாட்டை பாகிஸ்தான் தலைமையில் நாளை (அக்.16) நடைபெறுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்நிலை குழு இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளது. இ்க்குழு இன்று இஸ்லாமாபாத் சென்றடைந்தது.
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "எஸ்சிஓ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வர்த்ததம் மற்றும் பொருளாதார திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் ஆன்டுதோறும் இம்மாநாடு நடத்தப்படுகிறது. இந்த நோக்கங்களை எட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகள் மற்றும் முன்முயற்சிகளை இந்தியா தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
#WATCH | EAM Dr S Jaishankar arrived in Rawalpindi, Pakistan this evening for the 23rd Meeting of SCO Council of Heads of Government.
— ANI (@ANI) October 15, 2024
(Video: ANI; visuals earlier this evening) pic.twitter.com/7fqaGUSe0k
இதையும் படிங்க: "நீங்க செய்றது கொஞ்சமும் சரியில்ல" - கனடாவுக்கான தூதரை திரும்பப் பெறும் இந்தியா!
உலக நாடுகளின் தலைவர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வருகை தந்திருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மொத்தம் 900 உயர்நிலை குழுவினர் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக தலைநகர் இஸ்லாமாபாத்தில் 10 ஆயிரம் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தியா -பாகிஸ்தான் உறவுகள் குறித்த ஆலோசிக்க அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்லாமாபாத் செல்லவில்லை என்றும், எஸ்சிஓ கூட்டமைப்பின் நல்உறுப்பினராக மாநாட்டில் பங்கேற்கவே அவர் இஸ்லாமாபாத் செல்கிறார் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.