ETV Bharat / international

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்; செங்கல்பட்டில் அமையும் தொழிற்சாலை! எத்தனை பேருக்கு வேலை? - Omiyam Rs 400 Crore Invest In TN - OMIYAM RS 400 CRORE INVEST IN TN

TN govt has entered into an MoU with Omiyam: ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவின் ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே இன்று மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக தெரிவித்துள்ளது.

ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்த செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்த செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் (Credit - M.K.Stalin 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 1:38 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்குச் சென்றார். இந்த பயணமானது 17 நாட்கள் இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இப்பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் கடந்த 29ஆம் தேதி அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை அடுத்து, கடந்த 30ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இவைகளின் தொடர்ச்சியாக, நேற்று (ஆக.31) சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane) எலக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்யும் நிறுவனமான ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சந்திப்பு: இதற்கிடையே, சான்பிரான்சிஸ்கோவில் நேற்று (ஆக.31) நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும், அது இந்தியர்கள் இல்லாத நாடாக இருக்காது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய நாடாக உள்ளது.

இந்தியாவும், அமெரிக்காவும் உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான நாடுகள். இரண்டுமே ஜனநாயக நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா இருக்கிறது என்றால், ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது.

பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகமும் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. இவையெல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள்.

மேலும், 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதுதான் இதற்கு காரணம்.

ஆகவே, இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: இரண்டாம் நாள் போட்டிகள் முழு அட்டவணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.