லண்டன் : ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்து உள்ளனர். இந்நிலையில் ஸ்காட்லாண்ட்டில் உள்ள பெர்த்ஷெயர் பகுதிக்கு நண்பர்கள் சுற்றுலா சென்று உள்ளனர். அப்போது, நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் கால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்த போது செல்பி எடுக்க முயற்சித்து நிலையில் கால் இடறி தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது. தவறி விழுந்த வேகத்தில் இரண்டு இளைஞர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக நண்பர்கள் அந்நாட்டு அவசர சேவைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து ஸ்காட்லாண்ட் பேரிடர் மீட்புக் குழுவினர் படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீண்ட சோதனைக்கு பின்னர் இருவரது சடலம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மாணவர்களின் அடையாளம் வெளியிடப்படாத நிலையில் இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையை கொண்ட சென்ற மாணவர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : கேரளாவில் மூதாட்டியின் வாக்கை செலுத்தினாரா சிபிஎம் தலைவர்! வைரலாகும் சிசிடிவி! தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்! - Lok Sabha Election 2024