ETV Bharat / international

சட்டவிரோத தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு; 15 பேர் பலி - இந்தோனேசியாவில் சோகம் - Landslide In Indonesia - LANDSLIDE IN INDONESIA

இந்தோனேசியாவில் சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் சாதாரணமானது. கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில் உழைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு மெதுவான வாழ்வாதாரத்தை வழங்குகிறது. படுகாயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் அபாயத்தை இவை கொண்டிருந்தாலும் அங்குள்ள சூழ்நிலையில் உழைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு இத்தகைய சட்டவிரோத சுரங்கங்கள் தான் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 8:43 PM IST

பதங்: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலரை காணவில்லை. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக் மாவட்டத்தில் நேற்று கிராம தொழிலாளர்கள் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ​​நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சேற்றில் புதைந்தனர். சுமார் 25 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும், காயங்களுடன் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் பேரிடர் தணிப்பு முகமை அலுவலக தலைவர் இர்வான் எஃபெண்டி தெரிவித்துள்ளார்.

பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் இல்ஹாம் வஹாப் கூறுகையில், "நகரி சுங்கை அபு கிராமம் அருகே, மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, மின்தடை மற்றும் தொலைத்தொடர்பு இல்லாமை போன்றவை பெரும் பின்னடைவாக உள்ளது. அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 மணி நேரம் நடந்தால் மட்டுமே சுரங்கப் பகுதியை அடைய முடியும்" என்றார்.

இந்தோனேசியாவில் சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் சாதாரணமானது. கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில் உழைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு மெதுவான வாழ்வாதாரத்தை வழங்குகிறது. படுகாயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் அபாயத்தை இவை கொண்டிருந்தாலும் அங்குள்ள சூழ்நிலையில் உழைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு இத்தகைய சட்டவிரோத சுரங்கங்கள் தான் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.

இதையும் படிங்க: அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் மாற்றம்.. இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் சுரங்கப்பாதைகள் இடிந்து விழுவது ஆகியவை சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சில ஆபத்துகளாகும். தங்கத் தாது பதப்படுத்துதலின் பெரும்பகுதி அதிக நச்சு பாதரசம் மற்றும் சயனைடு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால் தொழிலாளர்கள் சிலர் மட்டும் குறைந்த பாதுகாப்பு அம்சங்களையே கொண்டிருப்பர். பெரும்பாலானோர் எந்த பாதுகாப்பை அம்சத்தையும் பயன்படுத்துவதில்லை.

இந்தோனேசியாவில் கடைசி சுரங்க விபத்து கடந்த ஜூலை மாதம் சுலவேசி தீவில் உள்ள கொரண்டலோ மாகாணத்தில் நிகழ்ந்தது. அங்குள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் வடக்கு சுமத்ராவின் மண்டைலிங் நடால் மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பெண்கள் உயிரிழந்தனர். அதற்கு முன்னதாக 2019 பிப்ரவரியில், வடக்கு சுலவேசி மாகாணத்தில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில், மண் சரிந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.