துபாய்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொமோரோஸ் தேசிய கொடி பொருத்திய சரக்கு கப்பல் ஒன்று துபாய், ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 13 இந்தியர்கள், இலங்கையை சேந்த 3 பேர் உள்பட 16 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
துக்ம் அடுத்த விலயத், ராஸ் மத்ரகாக்கின் தென் கிழக்கு பகுதியில் சுமார் 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்த சரக்கு கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கபட்டு உள்ளது. எண்ணெய் கப்பல் கடலில் கவிழ்ந்த நிலையில், அதில் பணியாற்றிய 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமாகி உள்ளனர்.
கப்பல் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்ததும் ஓமன் கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுவரை கப்பல் குறித்தும், அதில் பயணித்த 13 இந்தியர்கள் உள்பட 16 ஊழியர்களின் நிலை குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என மஸ்கட் கடற்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், அருகில் ஏதேனும் தீவுகளி இருந்தால் அங்கு ஊழியர்கள் சென்று இருக்கக் கூடும் என்றும், கப்பல் கவிழ்ந்த இடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள தீவுகளிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் மஸ்கட் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கப்பல் எப்படி கவிழ்ந்தது என்பது குறித்தும் அந்நாட்டு கடற்படை விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: புனே மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமை புகார் - அடுத்த அதிரடி கொடுத்த பூஜா கதேகர்! - Puja Khedkar