ETV Bharat / health

உங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்னென்ன தெரியுமா? சட்டம் சொல்லும் சமநீதி.! - Fundamental rights of Indian people - FUNDAMENTAL RIGHTS OF INDIAN PEOPLE

இந்தியராக பிறந்த அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் என்பது சமமாக இருக்கும் நிலையில், உங்களுக்கான உரிமைகள் என்ன என தெரிந்துகொள்ளுங்கள்.

Getty Image
உச்சநீதிமன்றம், கோப்புக்காட்சி (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 9:22 PM IST

சென்னை: இந்திய பிரஜையாக பிறந்த அனைவருக்கும் அடிப்படை உரிமைகளாக வரையறுக்கப்பட்டுள்ள ஆறு அடிப்படை உரிமைகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் உரிமைகள் அனுமதிக்கப்படுவதாக இந்திய சட்டம் சொல்கிறது. அந்த வகையில், அனைவருக்கும் பொதுவான ஆறு அடிப்படை உரிமைகள் குறித்து தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு தனிமனிதனின் உடைமை, அறிவுசார் உரிமை, நீதி மற்றும் ஆன்மிக மேம்பாடு போன்ற அனைத்திற்கும் மிக அத்தியாவசியமாக அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் ஆறு.!

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சமய சார்பு உரிமை
  • கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை
  • அரசியல் அமைப்பின்படி உள்ள உரிமை

பிரிவு 14-18 சமத்துவ உரிமை என்றால் என்ன? : சமத்துவ உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் மிக அடிப்படையான மற்றும் முக்கியமான உரிமையாகும். இதில் 6 விஷயங்கள் உட்கொள்ளப்பட்டு சமத்துவ உரிமை வரையருக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை, சமூகம், சிவில், அரசியல், பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது.

இதில் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்ற எவ்வித பாகுபாடும் இல்லை என சட்டம் சொல்கிறது. 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பின் மிக்கிய விதிகளில் இந்த சமத்துவ உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்வி, சிகிச்சை, வேலை வாயப்பு, உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் சமமாக கருதப்படும்.

பிரிவு 19-22 சுதந்திர உரிமை என்றால் என்ன?: தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொரு இந்திய பிரஜையும் சுதந்திரமாக அனுபவிக்க கடமைப்பட்டவர்களாக உள்ளனர். மேலும், தங்களுக்கு எதிராகவோ அல்லது சமூகத்திற்கு எதிராகவோ நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கவும், கருத்து தெரிவிக்கவும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.

மேலும், குற்றங்களுக்கு எதிராக ஆயுதம் இன்றி அமைதியான முறையில் போராட ஒவ்வொருவருக்கும் அனுமதி உண்டு. அதேபோல் இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் இந்தியர்கள் செல்லவும், தங்கள் வாழ்வாதாரத்தை அங்கேயே உருவாக்கிக்கொள்ளவும் உரிமை உண்டு. மேலும், ஒரு நபர் ஒரு குற்றத்திற்காக ஒரு முறை மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த சுதந்திர உரிமையின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

23-24 சுரண்டலுக்கு எதிரான உரிமை என்றால் என்ன?: கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது, பிச்சை எடுக்க வைப்பது, மனித உடல் உறுப்புகளை விற்பது உள்ளிட்ட அனைத்தும் சுரண்டலுக்கு எதிரான தண்டிக்க தக்க குற்றங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பதையும் அதற்கு மாற்றாக அவர்களை பணியில் அமர்த்தினால் அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

25-28 சமய சார்பு உரிமை என்றால் என்ன?: இந்திய பிரஜைகள் எந்த மதம் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வணங்கவும், வழிபடவும் இந்த சட்டம் அனுமதி வழங்குகிறது. மேலும், சமயத்தின் பேரில் கல்வி நிறுவனங்கள் நடத்தவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

29-30 கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை என்றால் என்ன?: இந்திய நாடு பல்வேறு பண்பாடு, கலாச்சாரம், மொழி உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக உள்ளது. மக்களின் பிறப்பில் இருந்து வாழ்வியலோடு ஒத்து இருக்கும் இவற்றை பாதுகாப்பதே இந்த உரிமையின் முக்கிய நோக்கம். சிறுபாண்மையினர் மொழி மற்றும் தங்கள் மதத்தின் பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்த இந்த சட்டத்தில உரிமை உள்ளது.

32-25 அரசியல் அமைப்பின்படி தீர்வு பெறும் உரிமை என்றால் என்ன?: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் விதி 32-ன் கீழ் முன் கூறிய 5 உரிமைகள் ஒருவருக்கு மறுக்கப்பட்டால் இந்த உரிமையின் கீழ் அவர்கள் நீதிபெற முடியும். அதாவது அவருக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்க பிரிவு 266-ன் கீழ் உயர்நீதிமன்றத்திலோ அல்லது பிரிவு 32-ன் கீழ் உச்சநீதிமன்றத்திலோ நேரடியாக வழக்கு தொடர்ந்து நீதி பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: வேட்டை விலங்குபோல் அச்சுறுத்தும் வளர்ப்பு நாய்கள்.. தடை செய்யுமா அரசு? - The Deadliest Dog Attacks

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.