சென்னை: உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒரு விஷயம். ஆனால், உடலுறவு குறித்தோ அல்லது அதன் மீதான ஆர்வம் குறித்தோ ஆண்கள் பேசும் அளவுக்கு, பெண்களால் வெளிப்படையாகப் பேச முடியாது. அப்படி பேசினால் அந்த பெண்ணிற்கு ஆபாசமான ஒரு முத்திரை குத்திவிடும் சமூகத்தில்தான் நாம் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
இது குறித்து WebMD இணையதளப் பக்கத்தில் பாலியல் குறித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் தனிப்பட்ட பாலியல் விருப்பங்கள் மற்றும் இருபாலருக்குமான மாறுபட்ட கருத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஆண்களை விட பெண்களின் உடலுறவு ரீதியான எண்ணங்கள் உடலோடு இல்லாமல் மனதளவில் பிணைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆண்களுக்கு அப்படி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இடம், சூழல், மனநிலை உள்ளிட்ட அனைத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழலில் மட்டுமே ஒரு பெண்ணால் முழுமையான உடலுறவில் இருக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, உடலுறவில் ஆர்வம் ஏற்படுத்தும் ஹார்மோன்கள், ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் சுரப்பதாகவும், இதனால் பாலியல் ஈடுபாட்டில் பெண்கள் மிகுந்த தேடல் கொள்வார்கள் எனவும் ஆய்வு கூறுகிறது. ஆனால், பெண்கள் தங்களுக்கு இருக்கும் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக கணவரிடம் கூட கூற முடியாத சமூக கட்டமைப்பில் வாழ்ந்துகொண்டு இருப்பதால், இன்றுவரை இது தொடர்பான பிரச்சினையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், ஆண்களின் உடலுறவு என்பது ஒரு ஸ்விச் ஆன் செய்து ஆஃப் செய்வது போன்ற கட்டமைப்பு எனவும், பெண்களின் உடலுறவு என்பது மிகவும் சிக்கலான இணைப்புகளோடு உள்ளடக்கியவை எனவும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளனர். அதாவது, பெண்களின் பாலியல் ஆர்வத்தில் ஹார்மோன் பிரச்சினை, குடும்பம், குழந்தைகள், பொருளாதாரம், உடல் ரீதியான மற்ற பிரச்சினைகள் என அனைத்தும் பின்னிப்பிணைந்து கிடக்கிறது.
ஆண்களுக்கு அந்த உணர்வு தானாகவே உருவாகும் வகையில் இருக்கிறது. மறுபக்கம், ஆண்கள் ஒருமுறை உடலுறவில் இருந்துவிட்டு உடல் சோர்வு அடைந்து விடும் சூழலில், பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைந்திருக்காது. இந்த ஆய்வின் போது ஆண் மற்றும் பெண் இணையர்கள், பெண் மற்றும் பெண் இணையர்கள், ஆண் மற்றும் ஆண் இணையர்கள் ஆகியோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதில், பெண் மற்றும் பெண் இணையர்கள்தான் தங்கள் பாலியல் உறவில் முழுமையான திருப்தி அடைந்ததாக கூறியுள்ளனர். காரணம் ஒரு பெண், மற்றொரு பெண்ணுடன் உறவு கொள்ளும்போது அவர்கள் அதன் திருப்தி அடையும் நிலையை உணர்ந்து செயல்படுகிறார்கள் என ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: sex-க்கு அடிமையா நீங்கள்: உங்களை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.! - sex addiction symptoms