ETV Bharat / health

உடல் எடையை குறைக்கும் 3 சூப்பர் டீடாக்ஸ் டிரிங்ஸ்..எப்படி குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க! - BEST DETOX DRINKS IN TAMIL

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வழிகளை தேடுகிறீர்களா? இந்த 3 பானங்களில் ஏதேனும் ஒன்றை தினசரி வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். பலன் விரைவில் கிடைக்கும்...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Oct 25, 2024, 10:51 AM IST

உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும் பலரும் பல வழிகளை தேர்ந்தெடுத்து முயற்சி செய்தாலும், ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிங்ஸை குடித்து வரலாம்...இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கிறது.

  • நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் செய்வது எப்படி?: ஒரு மிக்ஸி ஜாரில் விதை நீக்கி நறுக்கி வைத்த 2 நெல்லிக்காய், சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர், இதை நன்கு வடிக்கட்டி வெறும் வயிற்றில் குடிங்கள்.

பயன்கள்:

  1. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  3. சளி மற்றும் இருமல் நீங்க உதவுகிறது
  4. காயங்களை விரைவாக குணப்படுத்தும்
  5. செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது
  6. கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
வெள்ளை பூசணி ஜூஸ் எடை இழப்புக்கு உதவியாக இருக்கிறது
வெள்ளை பூசணி ஜூஸ் எடை இழப்புக்கு உதவியாக இருக்கிறது (Credits- GETTY IMAGES)
  • வெள்ளை பூசணி ஜூஸ் செய்வது எப்படி? : ஒரு மிக்ஸி ஜார் அல்லது பிளண்டரில், நறுக்கி வைத்த வெள்ள பூசணி, இஞ்சி, புதினா இலைகள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர், இந்த ஜூஸை வடிகட்டி எலும்பிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி குடித்து வரலாம்.

பயன்கள்:

  1. இதில், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடை இழப்புக்கு உதவியாக இருக்கிறது
  2. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
  3. செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
  4. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது
  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க்கும்
  6. உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது
  7. மனதை அமைதிப்படுத்தும்
இலவங்கப்பட்டை தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
இலவங்கப்பட்டை தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது (Credits- GETTY IMAGES)
  • இலவங்கப்பட்டை தண்ணீர் செய்வது எப்படி?: அடுப்பை ஆன் செய்து, ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர், ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு இலவங்கப்பட்டையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் ஒரு கிளாஸ் அளவிற்கு வந்ததும் அடுப்பை அணைத்து, வெது வெதுப்பாக குடிக்கலாம்.

பயன்கள்:

  1. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
  2. எடை இழப்பிற்கு சிறந்தது
  3. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
  4. ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வழங்குகிறது
  5. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
  6. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்
  7. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது

இதையும் படிங்க:

லெமன்..தேன்..வெந்நீர்..டக்குனு சிக்குன்னு மாற இதை செய்யுங்க!

தொங்கும் தொப்பை-ஐ குறைக்க வெள்ளை பூசணி ஜூஸ்..எப்படி குடிக்கணும் தெரியுமா?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.