ETV Bharat / health

உங்க காபியில் நெய் இருக்கா?..நெய் காபி குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள் என்ன? - GHEE COFFEE BENEFITS - GHEE COFFEE BENEFITS

GHEE COFFEE BENEFITS: தினசரி காலையில் குடிக்கும் காபியில் நெய் சேர்த்துக் குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுவது உண்மைதானா? காபியில் பாலுக்கு பதிலாக நெய்யை சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : Aug 25, 2024, 6:20 PM IST

ஐதராபாத்: காலையில் எழுத்து டீ, காபி குடிக்கவில்லை என்றால் நாள் முழுவதும் 'கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை' என பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். காரணம், உடலுக்கும் மனதிற்கும் அது தரும் புத்துணர்ச்சி தான். ஆனால், காபியில் பால் இல்லாமல் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.

பாலுக்கு பதிலாக நெய் கலந்த காபியை குடிப்பதால் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நெய் காபி செய்வது எப்படி?: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் காபி பொடியை போட்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும். பின்னர், ஒரு கப்பில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காபியை ஊற்றினால் நெய் காபி ரெடி.(குறிப்பு, இந்த காபியில் சர்க்கரை சேர்க்கக்கூடாது). தினமும், காலை வெறும் வயிற்றில் இந்த நெய் காபியை குடிப்பதால் வரும் நன்மைகளை இதில் தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்கிறது: நெயில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு (Good Fat) உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும், இந்த காபியை குடிப்பதால் செரிமானம் மேம்பட்டு உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது. பசி எடுப்பதை தவிர்த்து, நாம் அதிகமாக உணவு உட்கொள்வதை தடுக்கிறது.

அசிடிட்டியில் இருந்து விடுதலை: பொதுவாக டீ அல்லது காபி குடிப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. அதனால் தான் அவற்றை காலையில் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பிளாக் காபியில் நெய் சேர்த்து குடிப்பதால் உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்குகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது: காபியில் நெய் சேர்த்து குடிக்கும் போது, நெய்யில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் விட்டமின்கள் நம் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இது, நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

மூட்டு ஆரோக்கியம்: நெய்யில் உள்ள் ப்யூட்ரேட் என்ற சங்கிலி கொழுப்பு அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது மூட்டு ஆரோக்கியத்திற்கு பங்களித்து முட்டியில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

சருமத்தை பளபளப்பாக்கிறது: நெய் காபியை பருகுவதால் ஆரோக்கியமான தோற்றத்தையும் பளபளப்பான சருமத்தையும் பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி முதுமையில் ஆரம்ப அறிகுறிகளை குறைக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க: சர்க்கரை நல்லதா...கெட்டதா? இனி, சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.