ETV Bharat / health

மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி? இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.! - How to avoid monsoon diseases

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 8:42 PM IST

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நோய் பரவலும் அதிகரிக்கும் இந்த சூழலில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் தற்காத்துக்கொள்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மழை கோப்புப்படம்
மழை கோப்புப்படம் (Credit: Getty Image)

சென்னை: கோடை வெயில் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். மழையின் குளிரில் போர்வை போட்டுக்கொண்டு விடிவது தெரியாமல் உறங்குவதில் அப்படி ஒரு சுகம். என்னதான் மழையையும், மழைக்காலத்தையும் ரசித்தாலும், வரவேற்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் பிழைப்பு திண்டாட்டம் ஆகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மழைக்காலத்தில் வீட்டின் சுற்றுப்புறங்கள், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும். இதனால் அதில் இருந்து கொசுக்கள், ஈக்கள் மற்றும் நோய் தொற்றை பரப்பும் கிருமிகள் உருவாகும். இந்த சூழலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவில்லை என்றால், டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, என்1 எச்1, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

அது மட்டும் இன்றி, காற்றில் ஆதீத ஈரப்பதம் நிலவுவதால் அது உணவுகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால், ஃபுட் பாயிசன் ஆவது, வயிற்று வலி உள்ளிட்ட பல உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த நிலையில், மழைக்காலத்தில் பரவும் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள்: தனிப்பட்ட சுகாதாரம், சுற்றுப்புர சுகாதாரம், உணவு சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு உள்ளே பல்வேறு வகை சுகாதார வழிகாட்டுதல்கள் இருக்கின்றன...

  1. தனிப்பட்ட சுகாதாரம்:
  • கைகளை சுத்தமாக வைத்தல்: மழைக்காலம் மட்டும் அல்ல பொதுவாகவே நோய் தொற்று நேரடியாக உடலுக்குள் செல்ல கைகளில் இருக்கும் பாக்டீரியா கிருமிகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. மழைக்காலத்தின் ஈரப்பதம் அதற்கு மேலும் அனுகூலமாக செயல்படுவதால் ஆபத்து விளைவுகள் தீவிரமாக இருக்கும். இதன் காரணத்தால், கிருமி நாசினிகள் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். மேலும், கைகளை கழுவாமல் மூக்கு, வாய், காது, கண் உள்ளிட்ட பகுதிகளில் வைக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கும் இந்த அறிவுறுத்தலை எடுத்துக்கூறுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் பைகளில் கட்டாயமாக கிருமி நாசினி இருக்க வேண்டும்.
  • தோல் பராமரிப்பில் கவனம் செலுத்துங்கள்: மழைக்காலத்தில் உடல் ஈரப்பதத்துடனும் எண்ணெய் பசையுடனும் இருக்கும். இதனால் உடல் மற்றும் முகங்களில் பூஞ்சை தொற்று காரணமாக தடிப்புகள், முகப்பருக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறந்த சோப்பு கொண்டு குளிப்பது மட்டும் இன்றி உடலை நன்றாக துடைத்து உலர வைத்து பாதுகாப்புடன் இருங்கள்.
  • சுவாச ரீதியான பிரச்சினைகள் வரலாம்: ஒவ்வாமை மற்றும் சுவாசக்குழாய் தொற்று காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சல் மழைக்காலத்தில் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இருமல் அல்லது தும்மலின் போது உங்கள் வாயை மூடிக்கொள்வதுடன், நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்துக்கொள்ளவும். இது உங்கள் சுவாச ரீதியான நோய் தொற்று கிருமிகள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

2. சுற்றுப்புற சுகாதாரம்:

  • வீட்டில் மட்டும் அல்ல வீட்டின் அருகேயும் சுத்தம் தேவை: மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் பலர். குப்பைகள் மற்றும் சிரட்டை ஓடுகள், உள்ளிட்ட அனைத்தையும் வீட்டிற்கு வெளியே சாலைகளில் கொட்டி விடுவார்கள். சாலையில் உருவாகும் கொசுக்கள் நம் வீட்டிற்கு மட்டும் வராது என்ற அசாத்திய நம்பிக்கையோடு இருப்பார்கள். கவனத்தில் கொள்ளுங்கள்.. உங்கள் சுற்றுப்புறம் தூய்மையாக இல்லை என்றால் கொசுக்கள் மற்றும் கிருமிகள் குடிசை வீடு, மாடி விடு என எவ்வித பாரபட்சமும் இன்றி நோய்களை பரப்பிவிடும்.
  • வீட்டில் சுகாதாரம் பேணுங்கள்: வீட்டை கிருமி நாசினி கொண்டு துடைத்து நன்றாக உலர வைத்து பராமரியுங்கள். ஜன்னல் மற்றும் கதவு உள்ளிட்ட பகுதிகளில் கொசுவலை தடுப்பு கம்பிகளை போடுங்கள். வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டை சுற்றிலும் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுங்கள். கழிவறைகளை நாள்தோறும் குருமி நாசினிகள் கொண்டு ஒருமுறை கழுவி விடுங்கள். சமையலறையில் பாத்திரங்களை கழுவி உலர வைத்து கவற்றி வையுங்கள். அடுப்பு இருக்கும் பகுதிகளை கழுவி துடைத்து சுத்தமாக வைத்திருங்கள். பாத்திரம் கழும் இடத்தில் பாத்திரங்களை தேக்கம் போட்டு வைக்க வேண்டாம் இது கொசு வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஒட்டுமொத்தமாக சமையல் அறையில் ஈரப்பதம் தங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம்:

  • புதிய உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள்: மழைக்காலத்தில் உணவை அவ்வப்போது சமைத்து உண்பதே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவை சமைத்து சூட்டோடு உட்கொள்ள வேண்டும் எனவும், குடிநீர் கொதிக்க வைத்து ஆற வைத்து மிதமான சூட்டில் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். பழைய உணவுகளில் பேக்டீரியா தொற்று உடல்நல உபாதைகளுக்கு வழிவகை செய்யும் என்பதால், புதிய உணவுகளை சமைத்து உண்பதே சிறந்தது.
  • உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்: மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் எடுக்க வாய்ப்பு இல்லை. இதனால் பலரும் தண்ணீர் அருந்தாமல் இருப்பார்கள். இந்த சூழலில் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்ற வியற்வையோ அல்லது சீருநீரகமோ செயல்படும்போது உடல் களைப்புறும். தாகம் இல்லை என்றாலும், உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்துவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • தண்ணீர் பயன்பாட்டின்போது கவனம் தேவை: பருவமழை காலத்தில் தண்ணீரின் வழி பரவும் நோய் தொற்றுகள்தான் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடியுங்கள். காய்கறி மற்றும் பழங்கள் என எதுவாக இருந்தாலும் அதை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி பயன்படுத்துங்கள். ஹோட்டல்கள் உள்ளிட்ட எங்கு சென்றாலும் பாட்டில் தண்ணீரை வாங்கி குடியுங்கள்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்துக்கொள்ளுங்கள்: மழைக்காலத்தில் நோய்வராமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், வந்தால் அதை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியையும் நம் உடலில் ஏற்படுத்தி வைக்க வேண்டும். அதற்கு தகுந்த காய்கறி, கீரை மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழ வகைகள், கொட்டை வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
  • மழைக்காலத்திலும் சுறுசுறுப்பாக இருங்கள்: மழைக்காலம் என்பதால் வாக்கில், ஜாக்கிங் மற்றும் உடற் பயிற்சிக்கூடங்கள் செல்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். இருப்பினும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியை மேற்கொள்ள திட்டமிடுங்கள் அதை கடைபிடியுங்கள். மழையின் காரணத்தால் உங்கள் உடற்பயிற்சியில் தொய்வு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • ஆடை அணிவதில் கவனம் தேவை: வெயில் காலத்தில் மட்டும் அல்ல மழை காலத்திற்கும் பருத்தி ஆடைகள் சிறந்ததுதான். ஆடைகளை துவைத்து கிருமி நாசினியில் முக்கி எடுத்து நன்றாக உலர வைத்து அணியுங்கள். முடிந்த வரை அயன் செய்து அணியுங்கள். உள்ளாடைகளை ஈரமாக கட்டாயம் அணியக்கூடாது. அவற்றையும் நன்றாக அயன் செய்து அணிவது நல்லது. மேலும், கை கால்களை கவர் செய்யும் வகையில் முழு ஆடைகளை அணியவும்.

இதையும் படிங்க: மழைக்காலம் வந்தாச்சு!... நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.