ETV Bharat / health

தோசை மொறு மொறுன்னு வரலையா? ஒருமுறை மாவை இப்படி அரைத்து பாருங்களேன்! - How to make crispy dosa batter - HOW TO MAKE CRISPY DOSA BATTER

How to make crispy dosa batter: அனைவருக்கும் ஃபேவரைட்டான மொறு மொறு தோசையை இனி நமது வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? அதற்கு தான் சில எளிய டிப்ஸ்களைக் கொண்டு வந்துள்ளோம். டக்குனு ஃபாலோ பண்ணுங்க...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 7, 2024, 4:42 PM IST

ஹைதராபாத்: தோசை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? சட்னி, சாம்பார், பொடி என ஒவ்வொரு வாயிற்கும் ஒரு சைட் டிஸ்ஷை தொட்டும், ஏன் சில நேரத்தில் அனைத்தையும் ஒன்றாக கலந்து சாப்பிடும் போது கிடைக்கும் சுகமே தனி தான்? அதிலும், கடைகளில் கிடைக்கும் மொறு மொறு தோசைக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அப்படி, இனி கடைகளில் மட்டுமல்ல உங்கள் வீட்டிலும் மொறு மொறு தோசை சாப்பிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு பக்குவமாக எப்படி மாவு அரைக்கலாம், எப்படி சுட்டால் மொறு மொறு என்று தோசை வரும் என்பதைு இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • உளுத்தம் பருப்பு - அரை கப்
  • அரிசி - 2 கப்
  • பாம்பே ரவை - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

தேசை மொறு மொறு என்று வர பின்பற்ற வேண்டிய குறிப்புகள்:

மாவு அரைப்பதில் கவனம்: தோசை மிருதுவாக இருக்க, மாவை சரியான பதத்தில் அரைப்பது அவசியம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஊற வைத்ததை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். கடைசியாக, அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இதை சேர்க்கவும்: மாவு நன்றாக புளித்து வந்ததும், அதில் ரவையை சேருங்கள். தோசை மொறு மொறு என்று வருவதற்கு ரவை உதவியாக இருக்கிறது. ரவைக்கு பதிலாக, பச்சரிசியை அரைத்து மாவில் சேர்த்தாலும் மாவு மிருதுவாக வரும்.

சரியான வெப்பநிலையில் வைக்கவும்: பலரும் மாவை நேரடியாக பிரிட்ஜில் இருந்து எடுத்தவுடன் தோசை சுட தொடங்கிவிடுவார்கள். ஆனால், அப்படி செய்யாமல், பிரிட்ஜில் இருந்து எடுக்கும் மாவை குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் வெளியே வைக்கவும். மாவு அறை வெப்ப நிலைக்கு வந்ததும் தோசை சுட வேண்டும்.

தோசை ஊற்றுவது எப்படி?: முதலில், தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் போதுமான அளவு சூடானதும், அதன் மீது எண்ணெய் தடவ வேண்டும். அதன் பிறகு தண்ணீரை தெளித்து சிலிகான் பிரஷ் மூலம் தேய்க்கவும். இப்போது நாம் தயார் செய்து வைத்த மாவை மெல்லியதாக ஊற்றவும். இந்த தோசையை புரட்டி போட கூடாது. அவ்வளவு தான் கிரிஸ்பி தோசை ரெடி!

சில டிப்ஸ்: தோசை ஊற்றுவதற்கு முன்னதாக தீயை அதிகமாக வைக்க வேண்டும். ஊற்றிய பிறகு, கம்மியான தீயில் தோசையை சுட வேண்டும். அதே போல, இரு புறமும் தோசையை சுட வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்புறம் என்ன? இந்த குறிப்புகளை ஃபாலோ செய்து மொறு மொறு தோசை சுட்டு அசத்துங்கள்..!

இதையும் படிங்க:

திரும்பத் திரும்ப சாப்பிடத் தோன்றும் ஸ்பானிஷ் ஆம்லெட்..ஈஸியா செய்வது எப்படி?

இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.