சென்னை: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில், எங்குப் பார்த்தாலும் பலாப்பழம் விற்பனைதான் நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் லோடு கணக்கில் பலாப்பழங்களை இறக்கி, கூவிக் கூவி விற்று வருகின்றனர். இந்நிலையில் வருடத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் வரை மட்டுமே கிடைக்கும் பலாப்பழத்தை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அவை என்னென்ன எனப் பார்க்கலாம்:
பலாப்பழம் முழுமையான பச்சை நிறத்தில் இருக்கக்கூடாது. மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் அடித்திருக்க வேண்டும்
பழத்தில் உள்ள முட்களுக்கு இடையே நெருக்கம் இல்லாமல் விரிந்திருக்க வேண்டும்
பழத்தின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் இரண்டும் ஒரேமாதிரியான சைசில் மத்தளம்போல் இருக்க வேண்டும்.
பழத்தைத் தட்டிப்பார்த்தால் நன்றாக டம் டம் என்ற சத்தம் உள்ளே இருந்து வரவேண்டும்
இப்படி இருந்தால் அந்த பலாப்பழம் நன்றாக முத்து சுவையுடன் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பலாப்பழத்தை வைத்து என்னென்ன வெரைட்டி செய்ய முடியும் தெரியுமா?
- கேரளா சக்கை சிப்ஸ்
- பலா ஜாம்
- பலா பாயாசம்
- சக்கை வரட்டி
நன்றாகப் பழுக்காத பலாவை வைத்து என்னென்ன செய்யலாம்:
- பிரியாணி (Kathal ki Biryani, Jackfruit Biryani)
- ஊறுகாய்
- வத்தல்
- கபாப்
- கட்லெட்
- பக்கோடா
- சிப்ஸ்
இப்படி இன்னும் பலவகையான வெரைட்டிகளை பலாப்பழம் மற்றும் காயை வைத்துச் செய்ய முடியும். இதை விரும்பி உட்கொள்ளாத நபர்கள் இருக்கவே மாட்டார்கள்.
சரி பலாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்துத் தெரியுமா?
- உடலுக்கு நல்ல ஆற்றலைத் தருகிறது
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது
- கண்கள் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது
- தைராய்டு பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு
இப்படி இன்னும் பல்வேறு உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் பலாப்பழம் சிறந்து விளங்குகிறது. பலாப்பழம் மட்டும் இன்றி அதன் உள்ளே இருக்கும் கொட்டையும் வேக வைத்தோ அல்லது தீ கனலில் போட்டுச் சுட்டோ உட்கொள்ளலாம். இது புற்று நோய்க் கிருமிகளைக் கூட கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நச்சுத் தன்மை கொண்ட மாம்பழங்கள்.. லாப நோக்கத்திற்காக உயிரோடு விளையாடுவதா? - Mangoes Have Become Poisonous