ETV Bharat / health

"உடலுறுப்பு தான திட்டம் மிகவும் சவாலானது" - மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுவது என்ன? - organ donation - ORGAN DONATION

Organ Donation: உடல் உறுப்பு தானம் பெறுவதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருவதாகவும், உறுப்புகளை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று தான ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம், கோபாலகிருஷ்ணன்
கோப்புப்படம், கோபாலகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 7:45 PM IST

சென்னை: தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று தான ஆணையத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரையில் 7,739 பேர் உறுப்பு தானம் கேட்டு பதிவு செய்து காத்துக் கொண்டுள்ளனர். அவர்களில் 7,037 பேர் சிறுநீரகம், கல்லீரல் 428 பேர், இருதயம் 82 பேர், கணையம் 4, நுரையீரல் 54, இருதயம் மற்றும் நுரையீரல் 23 , கை 25, சிறுகுடல் 5, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 37, சிறுநீரகம் மற்றும் சிறுகுடல் 42, வயிறு, சீறுநீரகம், சிறுகுடல் மூன்றும் தேவையாக இருப்போர் 2 என 7,739 பேர் காத்திருக்கின்றனர்.

மருத்துவர் கோபாலகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டில் 178 உடல் உறுப்பு காெடையாளிகளிடம் இருந்து 70 இருதயம், கல்லீரல் 155, நுரையீரல் 110 , சிறுநீரகம் 313, கணையம் 5, சிறுகுடல் 5, கருவிழிகள் 224 , தசை 23, எலும்பு 57, இருதய வால்வு 38 என 1,000 உடல் உறுப்புகள் தானமாக பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று தான ஆணையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஜூலை மாதம் வரையில் 11,556 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு உடலுறுப்பு தான மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது, "உடல் உறுப்பு தானத்தில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதற்காக, அரசு பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சில செயல்பாடுகளை பிற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

உடல் உறுப்பு தான வகை: உடல் உறுப்பு தானம் இரு வகைப்படும். உடல் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு மாற்று உறுப்பு பொறுத்துவதை உடல் உறுப்பு தானம் எனக் கூறுகிறோம். உடல் உறுப்புகள் இரண்டு வகையாக பெறப்படுகின்றன. உயிருடன் வாழ்பவர்களிடம் நோயாளிக்கு நெருங்கிய உறவினர்களிடமிருந்து உடல் உறுப்புகளை பெறுவது ஒரு திட்டம். இந்த திட்டத்தில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பெற முடியும்.

மற்றொரு வகையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை அவரின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தும் முறையாகும். இரண்டு திட்டங்களிலும் தமிழ்நாடு நல்ல நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு 156 உறுப்பு கொடையாளிடம் இருந்து பெறப்பட்டன. அதேபோல் கடந்த 2023 ஆம் ஆண்டில் 178 ஆக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 165 கொடையாளிகள் உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளனர்.

உடல் உறுப்பு கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. பொதுமக்களிடம் பரவலாக விழிப்புணர்வு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் கடை கோடி மக்களுக்கும் விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்.

உடல் உறுப்பு தான திட்டம்: மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று மற்றவர்களுக்கு பொருத்தும் திட்டம் மிகவும் சவால் வாய்ந்தது. இந்த திட்டம் மருத்துவம் மற்றும் அறிவியல் அம்சங்களை தாண்டி மனிதாபிமானம், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவ கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்களும், சூட்சமங்களும் நிறைந்த வித்தியாசமான ஒரு செயல்முறையாகும்.

இதனை செயல்படுத்துவதற்கு பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. மருத்துவக் கண்ணோட்டம் மட்டுமே இதில் இல்லை. மருத்துவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஒரு நபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது என்பதை உறுதி செய்ய மருத்துவரால் தான் முடியும். அதனை தெரிந்து கொண்ட பின்னர் பல்வேறு பரிசோதனைகள் உள்ளன.

மூளைச்சாவு: ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரின் இருதயம், நாடித்துடிப்பு , சுவாசம் போன்ற எதுவும் இல்லாமல் முழுவதும் மயங்கிய நிலையில் இருந்தால் அவர் இறந்து விட்டார் என கூறுகிறோம். மூளைச்சாவு என்பது வித்தியாசமானது.

மூளை நிரந்தரமாக செயல் இழந்தாலும் அதுபோன்ற நபர்களுக்கு செயற்கை சுவாசத்தின் மூலம் ரத்த ஓட்டத்தை சீராகவும், இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, சுவாசம் உள்ளிட்ட அனைத்தையும் செயற்கை முறையில் தொடர்ந்து செயல்பட வைத்து அனைத்து உறுப்புகளும் நலமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஆனால் இது மிகவும் கடினமான விஷயமாகும். இதில் அதிக அளவில் மருத்துவ நுணுக்கங்களும் உள்ளது. இது நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே முடியும். தமிழ்நாட்டில் பெரும்பாலான மூளைச்சாவுகள் விபத்து போன்றவற்றால் ஏற்படுகின்றன. சில நேரங்களில் விபத்து இல்லாமல் மருத்துவ காரணங்களாலும் நிகழ்கின்றன.

குடும்பத்தில் உள்ள ஒருவர் திடீரென இறப்பதை உறவினர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் மூளைச்சாவு ஏற்பட்டது குறித்து எடுத்து சொல்லி நீங்கள் மனது வைத்தால் உங்கள் உறவினரின் உடலில் இருந்து உறுப்புகளை பெற்று ஏழு, எட்டு நபர்களை காப்பாற்ற முடியும் என்பதை உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் ஆலோசகர்கள் எடுத்து சொல்லி சம்மதம் பெறுகின்றனர்.

விடியல் ஆப்: மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தது குறித்து விடியல் ஆப் மூலம் தகவலை பதிவேற்றம் செய்வார்கள். இந்த ஆப் மூலம் உறுப்பு வந்தவுடன் அந்த உறுப்பு தேவையான காத்திருப்பவர்களில் முதல் 10 இடங்களில் உள்ள நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு தகவல் அளிக்கப்படும்.

மருத்துவமனைகள் தங்களது நோயாளிகள் உறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்ள தயாராக உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் அவருக்கு உறுப்பு ஒதுக்கீடு செய்யப்படும். உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகள் எந்த மருத்துவமனையில் உள்ளதோ அந்த மருத்துவமனைக்கு சென்று உறுப்புகளை எடுத்துச் சென்று அவர்கள் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள்.

மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்வதற்கான அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே இதனை செய்ய முடியும். மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தொடர்ந்து பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளும் அதற்குரிய லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அரசின் அனுமதியை பெற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் பலரின் பங்களிப்புள்ள ஒரு திட்டமாகும்.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் எடுத்த புதிய உத்திகளும், முன்னெடுப்புகளும் இதற்கு உறுதுணையாக உள்ளது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த திட்டத்தை நன்றாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மருத்துவமனையில் இறுதி மரியாதை ஊர்வலம் அளிக்கப்பட்டது.

அரசு மரியாதை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அரசாணை 331ஐ வெளியிட்டார். அந்த அரசாணையில் உடல் உறுப்புகள் தானம் கொடுத்த கொடையாளியின் உடல் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பின்னர் மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியர் நிலையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகள் செயலிழப்பு: தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உறுப்புகள் வேண்டி காத்திருப்போர் பட்டியல் தினமும் அதிகரித்து வருகிறது. சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் செயலிழந்து காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணங்களாக வாழ்வியல் முறை மாற்றம், பருவநிலை மாற்றம், வெப்பம் அதிகரிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுதல் ஆகியவற்றால் உடல் உறுப்புகள் செயலிழப்பு அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அதிகரிக்க வேண்டும் என பல முன்னெடுப்புகள் மேற்கொள்வதை காட்டிலும் 100 மடங்கு உடல் உறுப்பு செயல் இழப்பு நடக்காமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உடல் உறுப்புகள் தானம் அளிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு எந்த பாதிப்புகளும் இருக்கக் கூடாது. அதனால் தான் தற்போது மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானம் பெறவேண்டியது அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறுவதில் இரண்டாவது இடம் என தேசிய அளவில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளனர். உடல் உறுப்புகள் தானமாக அளித்த கொடையாளிகளின் எண்ணிக்கை 2023 ஆண்டில் 173. அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை பெற்று மாற்று அறுவை சிகிச்சை 1000 பேருக்கு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் பெறப்பட்ட உறுப்புகள் மற்றும் திசுக்கள் கணக்கெடுத்தால் நாம் தான் முதலிடம். தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெடுப்பால் இதுபோன்று சாத்தியமானது. அரசின் வழிகாட்டுதல், அதிகாரிகளின் வழிகாட்டுதல் போன்றவை அதிகமாக இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் மூளைச்சாவு அடைந்தவரின் உடல்களை பெறுவதற்கும், அதனை பாதுகாத்து வைக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

உடலை பாதுகாத்து உறுப்புகளை கேட்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை கண்டறிந்து எடுக்கும் வசதி தமிழகத்தில் உள்ளது போல் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீரிழிவு நோய்: கால்களை பரிசோதிப்பது அவசியம்.. டாக்டர் அட்வைஸ்! - Diabetes

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.